GENERATIONS OF INTERNET | தலைமுறைகளின் தலைமுறை இணையத்தின் 1G,2G,3G,4G,5G பற்றிய வரலாறு

GENERATIONS OF INTERNET | தலைமுறைகளின் தலைமுறை இணையத்தின் 1G,2G,3G,4G,5G பற்றிய வரலாறு

generations of internet
History of Internet Generations

GENERATIONS OF INTERNET – 1G:

1G என்பது Wireless Cellular Technologyன் முதல் தலைமுறையை குறிப்பதாகும். Wireless Cellular Technology என்பது எந்தவித ஊடகமும் இல்லாமல் இயங்கும் செல் தொழில்நுட்பம். First Generation என்றழைக்கப்படும் 1G ஆனது 1979ம் ஆண்டு டிசம்பர் 1 ஜப்பானில் Nippon Telegraph and Telephone என்ற நிறுவனத்தால் அமைக்கப்பட்டது. பிறகு 1980ம் ஆண்டு உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 1G தொழில்நுட்பம் Analog Telecommunication வகையை சார்ந்ததாகும். இங்கு Analog என்ற வார்த்தையானது காற்றில் இயங்கக்கூடிய அலைக்கற்றை என்று பொருள்படும். பின்பு இந்த தொழில்நுட்பம் 1981ம் ஆண்டு வாக்கில் Nordic Mobile Telephone என்ற நிறுவனம் மூலமாக ஐரோப்பிய நாடுகளில் பரவியது. அதனை தொடர்ந்து 1G தொழில்நுட்பம் 1983ம் ஆண்டு அக்டோபர் 13 அமெரிக்காவில் Ameritech என்ற நிறுவனம் மூலமாக நாடு முழுவதும் நிறுவப்பட்டது.

உலகில் முதல் மொபைல் போன் அனைத்தும் Car Phoneஆக Carல் மட்டும் இயங்குபவையாக இருந்தது. பிறகு 1983ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி உலகின் முதல் நடமாடும்(portable) செல்போன் மார்ட்டின் கூப்பர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1G தொழில்நுட்பத்தின் வேகமானது 2.4Kbps ஆகும். இந்த 1G தொழில்நுட்பம் மூலமாக நாம் பேச மட்டும் முடியும்.

Drawbacks of 1G:

* Poor battery (தரமற்ற மின்கலம்)

* Poor voice quality (தரமற்ற ஒலி திறன்)

* Large in size (அளவில் பெரியது)

* No security (பாதுகாப்பின்மை)

* Frequent call drop (அடிக்கடி அழைப்பு துண்டாதல்)

GENERATIONS OF INTERNET – 2G:

Radiolinja என்பவரால் 1991ம் ஆண்டு 2G அலைக்கற்றையானது முதல்முறையாக பின்லாந்தில் உருவாக்கப்பட்டது. 2G தொழில்நுட்பத்தை பொறுத்தவரை இதில் மூன்று விதமான சிறப்பம்சங்கள் உள்ளது.

i) போன் உரையாடல் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.

ii) ரேடியோ ஸ்பெக்ட்ரம் அதிர்வெண்களின் செயல்பாடு அதிகரித்திருக்கிறது. மேலும் ஒரு Frequency Bandல் நாம் பல பயனாளர்களை இணைக்க முடியும்.

iii) மொபைல் போனில் முதல் முறையாக SMS(Short Message Service) வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

2G அலைக்கற்றையானது பலவிதமான சேவைகளை text message, picture message, MMS(Multimedia message) போன்றவைகளை வழங்குகிறது. 2G அலைக்கற்றையில் அனுப்பப்படும் குறுஞ்செய்தியானது டிஜிட்டல் முறையில் Encryption செய்யப்பட்டுள்ளது. Encryption எனப்படுவது ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு தகவலை மாற்றுவதாகும் அதன் மூலமாக பெறுநர் மட்டுமே குறுஞ்செய்தியை வாசிக்க முடியும்.

1G அலைக்கற்றையில் ரேடியோ அலைகள் Analog வடிவில் இருப்பதைப்போல 2G அலைக்கற்றையில் ரேடியோ அலைகள் Digital வடிவில் இருக்கின்றன. ஆனால் 1G, 2G என்ற இரண்டு அலைக்கற்றைகளும் ரேடியோ டவர்களோடு தொடர்புகொள்ள Digital Signalsகளை பயன்படுத்துகிறது. நீங்கள் ஒரு மொபைல் சாதனத்தை பற்றி பேசும் பொழுது அது GSM Device (or) CDMA Device ஆகிய இரண்டினுள் ஏதாவது ஒன்றாக இருக்க வேண்டும்.

GSM:

GSM என்றால் GLOBAL SYSTEM FOR MOBILE COMMUNICATION என்று அர்த்தம். இது ஒரு வகையான Network Standard ஆகும்.

2.5 SECOND AND HALF GENERATION (GPRS):

Gprs என்பது Packet மூலமாக தகவல்களை அனுப்புவது Packet oriented mobile data standard ஆகும். இது Wireless communicationன் அடிப்படையில் செயல்படுகிறது. இதன் இணைய வேகமானது 56 kbps முதல் 114 kbps வரை கொடுக்கிறது.

2.75 GENERATION (OR) EDGE:

EDGE என்பது Packet மூலமாக தகவல்களை அனுப்புவது Packet oriented mobile data standard ஆகும். இது Wireless communicationன் அடிப்படையில் செயல்படுகிறது. இதன் இணைய வேகமானது 384 kbps வரை கொடுக்கிறது.

GENERATIONS OF INTERNET – 3G:

தொழில்நுட்ப அலைக்கற்றையின் முன்னேற்றம் மற்றும் தகவல் பரிமாற்றம் போன்றவற்றின் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்ட காலம். இதன் இணைய வேகமானது ஒரு நொடிக்கு 2Mbps ஆகும். சிறந்த வேகத்தில் தகவல் தொடர்பை ஏற்படுத்த, வேகமான ப்ரொவ்சிங் மற்றும் மின்னஞ்சலை அனுப்புவதற்கும் பெறுவதற்கும், இணைய வீடியோ ஒளிபரப்பிற்கும் இங்கே நாம் Smart Phoneகளை பயன்படுத்துகிறோம்.

3G ஆனது இரண்டு வகையான தொழில்நுட்பத்தை CDMA2000 & EDGE ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது.

GENERATIONS OF INTERNET – 4G:

2011ல் வெளிவந்த 4G தொழில்நுட்பமானது மிகவும் சிறப்பானதாகும் இதன் வேகமானது 100Mbps ஆகும். 4Gன் தரமானது ITU- R (International Telecommunication Union’s Radio communication Sector) வகையை சார்ந்ததாகும். இது IMT – Advanced (Internation mobile telecommunication advanced) என்றும் அழைக்கப்படுகிறது. 4Gயை தொடர்ந்து 4G LTE அறிமுகப்படுத்தப்பட்டது. LTE என்றால் Long Term Evaluation ஆகும்.

Characteristic of 4G:

I) இதன் வேகம் 100Mbps முதல் 1GB வரை ஆகும்.

II) மொபைல் இணையம்.

III) HD மொபைல் தொலைக்காட்சி.

IV) கிளவுட் கம்ப்யூட்டிங்.

V) இணைய தொலைபேசல்.

4G ஆனது பொதுவாக MAGIC என்று அழைக்கப்படுகிறது.

M – MOBILE MULTIMEDIA

A – ANYTIME ANYWHERE

G – GLOBAL MOBILITY SUPPORT

I – INTEGRATED WIRELESS SOLUTION

C – CUSTOMIZED PERSONAL SERVICE

GENERATIONS OF INTERNET 5G:

இந்தியாவில் இது 2020ம் ஆண்டிற்குள் நிறுவப்படலாம் என்று கணிக்கப்படுகிறது. இதன் வேகமானது 1Gbpsலிருந்து 100Gbpsவரை அபாரமாக உள்ளது. இது faster dialing speeds, multiple device connectivity, higher data speeds போன்றவற்றை சிறப்பாக வழங்குகிறது. இது IOT தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

To read more about how internet work visit here….

Share the knowledge