ஆயிரம் கண்ணுடையாள் கூகிளின் PAGERANK ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது-TAMIL ARTICLE

ஆயிரம் கண்ணுடையாள் கூகிளின் PAGERANK ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

கூகிள் வலைத்தள நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான லார்ரி பேஜ்(Larry Page) என்பவரின் பெயரினால் உருவாக்கப்பட்டதே PAGERANK ஆகும். PAGERANK என்பது ஒருவகையான ALGORITHM ஆகும். கூகுள் தேடுபொறி தனது தேடுதல் முடிவுகள் அனைத்தையும் இந்த PAGERANK SPECIAL ALGORITHMன் அடிப்படையிலேயே வெளியிடுகிறது. கூகுளை பொறுத்தவரை இந்த PAGE RANK ALGORITHM ஆனது வலைதள பக்கத்தினுடைய முக்கியத்துவத்தை அளக்க பயன்படுகிறது.

இணையத்தில் நாம் ஒரு வலைதள பக்கத்தை தேட அதிக நேரம் எடுக்கிறது மேலும் நீங்கள் தேடும் வலைத்தளத்தில் மிகவும் சிறந்த வலைத்தளம் எது என்பதையும் கண்டறிவது ரொம்ப சவாலாக உள்ளது தங்களுக்கு ஒரு இணைய வலைத்தளத்தின் சரியான முகவரி தெரிந்திருந்தால் தாங்கள் அதன் மூலமாக வலைத்தளத்தை அடைய இயலும் ஒருவேளை வலைதள முகவரி அறியாமல் தகவல்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்படின் அதை களைய கூகிள் தேடுபொறி எந்திரம் நமக்க உதவுகிறது.

Google’s Pagerank algorithm

இணைய சேவை நிறுவனமான NETCRAFT ன் சமீபத்திய ஆய்வு முடிவுகளின் படி சுமார் 150,000,000 இணையத்தின் வலைத்தளங்கள் இயக்கத்தில் உள்ளன. இதில் இங்கு நாம் நமக்கு வேண்டிய வலைதள பக்கத்தை கண்டறிந்து தகவல் பெறுவது என்பது மலையில் குண்டூசி தேடுவது போன்றதாகும். ஆகையால் இந்த வேலையை எளிமையாக்க SEARCH ENGINEகள் அனைத்தும் ஒருவித COMPLEX ALGORITHM என்கிற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயனரின் தகவல் தேடலை எளிமையாக்குகிறது.

நீங்கள் தேடும் தகவலை KEYWORDன் அடிப்படையில் உங்களுக்கு GOOGLE ALGORITHM எளிதாக்குகிறது.பிறகு ஒவ்வொரு வலைதள பக்கத்திற்கும் அவைகள் தேடப்படும் அடிப்படையில் ஒரு PAGE RANKயை கொடுக்கிறது. இந்த GOOGLE PAGE RANK என்பது பலவித காரணிகளின் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது.

ஒரு வளைத்த பக்கமானது எத்தனை முறை தேடப்படுகிறது, எந்தெந்த KEYWORDயை பயன்படுத்தி ஒரு வலைதள பக்கம் அடையப்படுகிறது, எத்தனை பயனர்கள் இணைய வலைதளத்தை அதன் நேரடி WEBSITE URL LINK முகவரியை பயன்படுத்தி அடைகிறார்கள், மேலும் எத்தனை முறை ஒரு வலைத்தளத்திற்கு திரும்ப வருகிறார்கள் எவ்வளவு நேரம் அங்கு இணைய தேடல் பக்கத்தில் செலவிடுகிறார்கள் அதைத்தவிர வலைத்தளமானது இணையத்தில் ஒரு நாளில் வாரத்தில் மற்றும் மாதத்தில் எத்தனை முறை தேடப்படுகிறது இதுபோல் பல காரணிகள் உள்ளன.

ஒரு வலைதள பக்கத்தின் PAGE RANK சிறப்பாக இருந்தால் அது கூகிள் SEARCH ENGINE RESULT PAGE (SERP)ல் முன்னெடுத்து காட்டப்படுகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால் தாங்கள் தேடும் KEYWORDன் அடிப்படையில் காட்டப்படும் GOOGLE SEARCHING LINK ஆனது இணைய வலைத்தளத்தில் முதன் முதலில் காட்டப்படுகிறது. பிறகு அடுத்தடுத்த இணைய பக்கங்கள் PAGE RANKன் அடிப்படையில் முறையே ஒன்றன் பின் ஒன்றாக பட்டியலிடப்படுகிறது.

இணையத்தில் பணியமர்த்தப்படும் WEBSITE PAGE ADMINISTRATORகள் அனைவரும் ஒரு வலைதள பக்கத்தின் PAGE RANKயை எவ்வாறு முன்னேற்றுவது. எவ்வாறு ஒரு வலைத்தள பக்கத்தை முன்னெடுத்தி இணையத்தில் BOOST செய்து காட்டுவது போன்ற பணியை செய்கின்றனர். இந்த பணியை இணையத்தில் SEO (SEARCH ENGINE OPTIMIZATION) என்று குறிப்பிட்டு அழைக்கிறார்கள். கூடவே இதில் பணிவாய்ப்பும் கொட்டிக்கிடப்பது குறிப்பிடத்தகுந்தது.

கூகிள் KEYWORD SEARCH என்பது மற்ற தேடுபொறி இயந்திரத்தை போன்று செயல்படுகிறது. AUTOMATED PROGRAMS என்று அழைக்கப்படும் SPIDERS (OR) CRAWLERS என்பவை இணையத்தில் ஆழமாக உள்ளார்ந்து செயலாற்றுகிறது. பிறகு இவைகள் இணையத்தின் ஒரு LINKலிருந்து மற்றொரு LINKற்கு சென்று அவை தேடப்படும் PARTICULAR KEYWORDன் அடிப்படையில் GOOGLE INDEX PAGEல் PAGE LINKயை பட்டியலிடுகிறது.

பயனர் எப்போது ஒன்றை இணையத்தின் கீழ் தேடுகிறாரோ அப்போது கூகுள் அதை இணையத்தில் GOOGLE INDEXல் பட்டியலிடுகிறது. இணையத்தில் ஒரே வகையான KEYWORDயை கொண்ட வளைய பக்கங்கள் அனைத்தையும் கூகுள் பட்டியலிடுகிறது. GOOGLE SPIDER ஆனது மேலும் சில சிறப்பு வாய்ந்த பலவித அம்சங்களை கொண்டுள்ளது. இது வளைத்தள பக்கங்களுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகளை நன்கு கண்டறிய பயன்படுகிறது.

உதாரணமாக ஒரு தகவலை தேடும் பொது அது வலைதளத்தின் உண்மை பக்கத்திற்கு செல்கிறதா அல்லது REDIRECT LINK மூலமாக வேறொரு வலைத்தளத்திற்கு செல்கிறதா என்பதை கண்டறிய பயன்படுகிறது. REDIRECT LINK மூலம் வேறொரு வலைத்தளத்திற்கு சென்றால் அது குறிப்பிட்ட  தளத்தினுடைய PAGE RANK மற்றும் அதன் TRAFFICயை அதிகப்படுத்தும்.

நாம் கொடுக்கும் KEYWORDன் அடிப்படையிலேயே கூகிள் அனைத்து வலைத்தளத்தையும் வரிசையாக பட்டியலிடுகிறது.இங்கு INTERNET KEYWORD முக்கிய பங்காற்றுகிறது. கொடுக்கப்படும் தலைப்புகளில் இருந்தும் கூகிள் பொருத்தமான KEYWORDயை தேர்ந்தெடுக்கிறது. மேலும் கூகிள் ஏற்கனவே MAPPING முறையில் செய்து வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான சிறந்த வலைதளத்தள பக்க முகவரியின் அடிப்படையில் பயனர் கொடுத்துள்ள KEYWORDற்கு ஏற்றமாறி தேடுதல் பக்கங்களை அதன் INDEX PAGEல் காட்டுகிறது.

Share the knowledge

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *