FRENCH IN TAMIL – FRENCH INTERROGATIVE ADJECTIVE IN TAMIL EXPLAINED
பிரெஞ்சு மொழியில் கேள்வி வாக்கியம் மற்ற மொழியின் கேள்வி வாக்கியத்தைப் போல் இல்லாமல் சற்று வித்தியாசமானதாகும். இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழ் மொழியில் கேள்வி வாக்கியம் என்ன/எது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது நாம் ஒரே ஒரு வார்த்தையை தான் அனைத்து இடங்களுக்கும் பயன்படுத்துகிறோம் ஆனால் பிரெஞ்சு மொழியில் அவ்வாறு இல்லாமல் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ப அது மாறுபடுகிறது குறிப்பாக நாம் பிரெஞ்சு மொழியில் நான்கு வகையாக கேள்விகளை பரிக்கிறோம். அவையாவன,
- ஆண்பால் ஒருமை கேள்வி வாக்கியம்
- ஆண்பால் பண்மை கேள்வி வாக்கியம்
- பெண்பால் ஒருமை கேள்வி வாக்கியம்
- பெண்பால் பன்மை கேள்வி வாக்கியம்
இதற்கு முன்பு நாம் தெளிவாக அறிந்து கொள்வது என்னவென்றால் ஒவ்வொறு வினைச்சொல்லும் ஆண்பால் வகை மற்றும் பெண்பால் வகை என்ற இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது அதற்கேற்ப நாம் பிரெஞ்சு மொழியில் வினா வாக்கியம் எழுப்பும் பொழுது அந்த சொல் ஆண்பால் ஒருமையா அல்லது ஆண்பால் பன்மையா இல்லை பெண்பால் ஒருமையா அல்லது பெண்பால் பன்மையா என்று ஆராய்ந்து அதற்கேற்றாற்போல் பிரெஞ்சில் QUEL, QUELS, QUELLE, QUELLES போன்ற வார்த்தைகள் பயன்படுகின்றன.