FRENCH IN TAMIL(GREETINGS) – FRENCH GREETINGS IN TAMIL EXPLAINED

FRENCH IN TAMIL(GREETINGS) – FRENCH GREETINGS IN TAMIL EXPLAINED

FRENCH GREETINGS IN TAMIL

பிரெஞ்சு மொழியில் நாம் பல விதமான வாழ்த்துக்களைப் பறிமாற நமக்கு மொழியின் வளமை அவசியம். இங்கு நாம் பிரெஞ்சு மொழியில் என்னென்ன முக்கியமான வாழ்த்துச் சொற்கள் உள்ளன என்பதைப் பற்றி பார்க்க இருக்கிறோம்.

SALUT (சலுாத்)

சலுாத் என்பது நாம் நமது வயதிற்கு சமமானவர்கள் மற்றும் நமது வயதிற்கு கீழே உள்ளவர்களிடம் கூறுவது. இதன் அர்த்தம் நாம் ஆங்கிலத்தில் கூறும் “HI” என்ற சொல்லிற்கு இணையாகும்.

BONJOUR (பூன்ஜூஹ்)

பூன்ஜூஹ் என்பது நாம் மரியாதையாக மற்றவருக்கு சொல்லும் ஹலோ என்ற வார்த்தையாகும். அதைத்தவிர இங்கு இதற்கு பல அர்த்தங்கள் உண்டு அவைகள் HI, HELLO, GOOD MORNING, GOOD AFTERNOON போன்றவைகள் ஆகும்.

BONSOIR (போன்ஸ்வா)

போன்ஸ்வா என்பது நாம் மற்றவர்களை மாலை நேரத்தில் சந்திக்கும் போது கூறும் மாலை வணக்கம் ஆகும். நாம் முன்பு பார்த்த பூன்ஜூஹ் வார்த்தையானது காலை வணக்கம், மதிய வணக்கத்திற்கு பயன்பட்டது. ஆனால் இங்கே போன்ஸ்வா சொல்லானது மாலை வணக்கத்திற்கு மட்டுமே பயன்படுகிறது.

QUOI DE NEUF? (குவா தெ நப்)

குவா தெ நப் என்பது நாம் நண்பர்களையோ அல்லது நெருங்கியவர்களைப் பார்க்கும் போது கூறும் “எப்படி போய்ட்டு இருக்கு மச்சி” என்பதற்கு சமமான சொல்லாகும்.

AU REVOIR (ஒ ஹோவா)

ஒ ஹோவா என்பது நாம் நமக்கு பிரியமானவர்களிடம் இருந்து விடைபெறும் போது சொல்லும் GOOD BYE என்னும் சொல்லிற்கு இணையானதாகும்.

À PLUS TARD (அ ப்ள தாஹ்)

À PLUS TARD  எனும் சொல்லானது SEE YOU LATER என்ற சொல்லிற்கு இணையானதாகும். நான் உன்னை பிறகு பார்க்கிறேன் என்று அர்த்தமாகும்.

1 thought on “FRENCH IN TAMIL(GREETINGS) – FRENCH GREETINGS IN TAMIL EXPLAINED”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *