உலகின் முதல் 5G சேவையை தொடங்கி வெற்றிகரமாக ஓர் ஆண்டை நிறைவு செய்த தென்கொரியா ஒரு பார்வை
2019 ம் ஆண்டில் உலகில் முதன் முறையாக 5G அலைக்கற்றையை நாடு முழுவதும் செயல்படுத்தி சாதனை படைத்துள்ளது தென் கொரியா. இந்த நாடு தங்கள் தொழில்நுட்ப சந்தையை மேம்படுத்தி பல விதமான வாடிக்கையாளர்களை பெற பல விதமான பில்லியன்களை செலவளித்திருக்கிறது. SK TELECOM நிறுவனத்தின் சில விளையாட்டு வீராங்கனைகளுக்கு மற்றும் ஒலிம்பிக்கின் தங்க பதக்க வீரர்கள், பாப் நட்சத்திரங்கள் ஆகியோர்களுக்கு முதல் 5G சேவை வழங்கி பயனாளர்களாக காட்டப்பட்டிருக்கிறார்கள்.

மொத்தத்தில் 27மில்லியன் மக்கள் தொகையை கொண்டுள்ள அந்த நாட்டில் ஓர் ஆண்டிற்குள் 1 மில்லியன் பயனாளர்கள் இந்த சேவை மூலம் பயன் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவை ஏற்பட காரணகர்த்தாவாக இருந்தது தொழில்நுட்ப சாம்ராட் என்றழைக்கப்படும் சாம்சங் நிறுவனமேயாகும்.
கைபேசி இணையத்தின் அடுத்த நிலையாக கருதப்படும் அதிக வேகம் மற்றும் அதிக பேண்ட்வித்தை இந்த 5G அலைக்கற்றை அளிக்கிறது. இது மேலும் பல துறைகளின் செயல்பாடுகளை துரிதப்படுத்துகிறது உதாரணமாக கணினியில் Online Gamingல் Streamingஐ அதிகரிக்க மற்றும் தானியங்கி வாகனங்களிலும், IOT துறையிலும், ரிமோட்டை பயன்படுத்தி விர்சுவாலாக செயலாற்றும் எல்லா துறைகளிலும் இதன் தேவை அதிகமா காணப்படுகிறது.
மேலும் அலைக்கற்றை தொடர்பாக பலவிதமான குழப்பங்களும் கட்டுக்கதைகளும் நிலவி வருகின்றன அதாவது 5G Infrastructure நிறுவனமான ஹுவாய் மூலமாக சீனா தங்களை உளவு பார்க்க துணை போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுபற்றி ஹுவாய் நிறுவனமானது இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று மறுத்துள்ளது.
கடந்த வருடம் 2019 ஏப்ரல் மாதம் 3ம் தேதி இந்த அலைக்கற்றை சேவையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி 2020 ஏப்ரல் மாதத்தையொட்டி தென்கொரியா வெற்றிகரமாக ஓர் ஆண்டை நிறைவு செய்துள்ளது.