ஆன்லைனில் உங்களுக்கோ, உங்களின் நண்பருக்கோ அல்லது அறக்கட்டளைக்கோ நிதியை திரட்டும் FACEBOOK FUNDRAISER TOOL
தற்பொழுது முகநூலில் FACEBOOK FUNDRAISER TOOL என்ற ஒரு செயலி பிரபலமாகி வருகிறது. இது முதன் முதலில் Birthday Fundraiserஆக அறிமுகமானது. Birthday Fundraiser எனப்படுவது நீங்கள் உங்கள் பிறந்தநாளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே உங்கள் முகநூல் நண்பர்களிடம் இருந்து நிதியை திரட்டி அதை உங்கள் பிறந்த நாள் அன்று ஏதேனும் ஒரு அறக்கட்டளைக்கு கொடுப்பதாகும்.
அதைத்தவிர மேலும் இந்த டூலில் Personal Fundraiser, Public Fundraiser என இரண்டு வகைகள் உள்ளன. Personal Fundraiser என்பது நீங்கள் உங்களுக்காக நிதியை திரட்டுவதாகும் உதாரணமாக உங்களின் கல்வி அல்லது ஆபத்து கால மருத்துவ செலவு போன்றவையாகும்.
Public Fundraiser என்பது நீங்கள் இந்த சமுதாயத்திற்காக நிதியை திருடுவதாகும் இவ்வாறாக திரட்டப்படும் நிதியானது கண்டிப்பாக முகநூலால் ஏற்கனவே சரிபார்க்கப்பட்ட Non-Profit Organizationகாக மட்டுமே இருக்க வேண்டும்.
இந்த Public Fundraiserமூலமாக நாம் சுனாமி, புயல், வெள்ளம் மற்றும் கொரோனா காலத்திலும் கூட இதன் மூலமாக நிதி திரட்டி சம்பந்தப்பட்ட Non-Profit Organization, Charity போன்றவைக்கு அனுப்பலாம். .