DIGITAL SIGNATURE IN TAMIL – உங்களின் தலையெழுத்தை மாற்றும் தொழில்நுட்பம் டிஜிட்டல் கையொப்பம் இவன் நம்பிக்கையின் மறுபக்கம்

DIGITAL SIGNATURE IN TAMIL –  உங்களின் தலையெழுத்தை மாற்றும் தொழில்நுட்பம் டிஜிட்டல் கையொப்பம் இவன் நம்பிக்கையின் மறுபக்கம்

DIGITAL SIGNATURE IN TAMIL:

ஒரு குறிப்பட்ட சில வருடங்களுக்கு முன்னால் நாம் அனைவரும் கையொப்பத்தை(SIGNATURE) நமது கையால் மட்டுமே செய்து வந்தோம். ஆனால் தற்பொழுது இருக்கும் இந்த டிஜிட்டல் உலகத்தில் நாம் DIGITAL SIGNATURE தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கையொப்பமிடுகிறோம். இது இணையத்தில் ஆவணங்களில் நமது அடையாளத்தை(IDENTITY) சரிபார்ப்பதில் பயன்படுகிறது. இந்த டிஜிட்டல் கையொப்பங்கள் அனைத்தும் குறிப்பாக வணிகர்களுக்கு அதிக பயனுள்ளதாக உள்ளது. DIGITAL SIGNATURE வணிகர்களின் நிறுவனங்களுக்கு குறிப்பாக INCOME TAX, E-FILLING, EPFO FILLING, INTERNET BANKING, GST RETURN FILLING, E-TENDER, QUOTATIONS & INVOICES  போன்றவற்றில் டிஜிட்டல் முறையில் சான்றிதழ்(DSC) பெற DIGITAL SIGNATURE வழிவகுக்கிறது.

DIGITAL SIGNATURE IN TAMIL
DIGITAL SIGNATURE IN TAMIL

இந்த DIGITAL SIGNATUREல் தகவலை யாரும் மாற்ற முடியாது மேலும் இது PENDRIVE போன்ற வடிவில் சிறியதாக இருக்கும். அதன் மூலமாக ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு எளிதில் எடுத்துச் செல்ல இயலும். இந்த DIGITAL SIGNATUREல் யாரும் போலியாக(DUPLICATE) எதையும் தயாரிக்க முடியாது. இந்த DIGITAL SIGNATURE CERTIFICATல் கீழ்க்கண்ட தகவல்கள் அடங்கியிருக்கும்.

DIGITAL SIGNATURE IN TAMIL:

USERNAME (பயனர் பெயர்)

PIN CODE (அஞ்சல் குறியீடு)

COUNTRY (நாடு)

EMAIL ADDRESS (எலக்ட்ரானிக் மின்அஞ்சல் முகவரி)

DATE OF ISSUANCE OF CERTIFICATE (சான்றிதழ் வழங்கிய தேதி)

NAME OF THE CERTIFYING AUTHORITY (சான்றிதழ் வழங்கிய அதிகாரி)

எதற்கு பயன்படுகிறது இந்த DSC?

இந்த DIGITAL SIGNATURE நமது அடையாளத்திற்கான ஒரு எலக்ட்ரானிக் சான்றிதழ் ஆகும். இந்த DIGITAL SIGNATURE மூலம் பயனருக்கு முக்கியமாக ஒரு PRIVACY கிடைக்கிறது. பயனரின் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாகவும் ரகசியமானதாகவும் இருக்கும்.

DIGITAL SIGNATURE பயன்கள்:

REDUCE COST AND TIME (காலம் மற்றும் செலவு குறைகிறது)

DATA INTEGRITY (தகவலின் உண்மைத்தன்மை)

AUTHENTICITY OF DOCUMENTS (ஆவணங்களின் நம்பகத்தன்மை)

DUPLICATION IMPOSSIBLE (போலியின்மை)

FULFILLING STATUTORY COMPLIANCES (குறைபாடின்மை)

GST RELATED FILES (ஜிஎஸ்டி வரியில்)

DIGITAL SIGNATURE வழங்கும் உரிமையுள்ளவர்கள்:

இந்தியாவில் DIGITAL SIGNATURE வழுங்கும் உரிமையுள்ளவர்கள் E-MUDRA மையமாகும். இதைத் தவிர மற்ற சில மையங்களும் உதாரணமாக CODE SOLUTIONS, NATIONAL INFORMATICS CENTRE, SAFESCRYPT, INSTITUTE FOR DEVELOPMENT AND RESEARCH IN BANKING TECHNOLOGY போன்றவைகளும் வழங்குகின்றன. இந்த DIGITAL SIGNATURE சான்றிதழானது மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

THREE TYPES OF DSC:-

CLASS 1 CERTIFICATES (முதல் நிலை சான்றிதழ்)

CLASS 2 CERTIFICATES (இரண்டாம் நிலை சான்றிதழ்)

CLASS 3 CERTIFICATES (மூன்றாம் நிலை சான்றிதழ்)

CLASS 1 CERTIFICATES:

CLASS 1 CERTIFICATES எனப்படும் இந்த முதல் வகை சான்றிதழானது தனி நபர்களுக்கு மட்டும் வழங்கப்படும் ஒரு விதமான சான்றிதழ் ஆகும். இங்கே இது தனிநபர் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான ஆவணங்களின் டிஜிட்டல் சேவைகளுக்கும் பயன்படுகிறது.

CLASS 2 CERTIFICATES:

CLASS 2 CERTIFICATES எனப்படும் இந்த இரண்டாம் வகை சான்றிதழானது ஒரு நிறுவனத்திற்கோ அல்லது கையொப்பமிடும் உயர் அதிகாரிகளுக்கோ பயன்படுகிறது. இங்கே இது நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான டிஜிட்டல் ஆவணங்களின் சேவைகளுக்கும் பயன்படுகிறது.

CLASS 3 CERTIFICATES:

CLASS 3 CERTIFICATES எனப்படும் இந்த மூன்றாம் வகை சான்றிதழானது இணையத்தில் ஈடுபடுவோர்(ONLINE PARTICIPATION) மற்றும் இணையத்தில் குத்தகைக்கு விடுவோர் போன்றவற்றிற்கு பயன்படுகிறது. ஆன்லைன் வர்த்தகத்தில் பங்கு பெற விரும்பும் அனைத்து வியாபாரிகளும் CLASS 3 DIGITAL SIGNATURE CERTIFICATE கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

MATHEMATICAL SCHEME:

DIGITAL SIGNATURE என்பது ஒரு MATHEMATICAL SCHEME ஆகும். இது டிஜிட்டல் குறுஞ்செய்தி மற்றும் டிஜிட்டல் ஆவணங்களின் நம்பகத்தன்மைகளை பற்றி சரிபார்க்கப் பயன்படுகிறது. ஒரு மதிப்பு வாய்ந்த DIGITAL SIGNATURE குறுஞ்செய்தி என்பது அந்த குறுங்செய்தியானது நம்பகமான அனுப்புனரிடம்(authentication) இருந்து தான் வந்துள்ளது என்பதை உறுதி செய்கிறது. கூடவே அந்த குறுங்செய்தியின் உண்மைத்தன்மை(INTEGRITY) மாறவில்லை என்பதையும் உறுதி செய்கிறது.

DIGITAL SIGNATURE என்பது பலவிதமான CRYPTOGRAPHIC PROTOCOLற்கு ஒரு முக்கியமான அங்கமாகத் திகழ்கிறது. மேலும் இது பொதுவாகக் பின்வரும் துறைகளில் பயன்படுகிறது.

SOFTWARE DISTRIBUTION (மென்பொருள் பகிர்வு)

FINANCIAL TRANSACTIONS (நிதி பறிமாற்றம்)

CONTRACT MANAGEMENT SOFTWARE (குத்தகை மேலாண்மை மென்பொருள்)

அதைத்தவிர இது ஏமாற்று வேலைகளில் ஏமாற்றைக்(FORGERY) கண்டறியவும் மேலும் வாடிக்கையாளர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஒரு உற்பத்திப் பொருளை(TAMPERING) கண்டறியவும் பயன்படுகிறது.

DIGITAL SIGNATURE IN E-SIGNATURE:

DIGITAL SIGNATUREகள் அனைத்தும் E-SIGNATURES (OR) ELECTRONIC SIGNATURESகளில் பெரும்பாலும் பயன்படுகிறது. ஆனால் அனைத்து E-SIGNATURESகளிலும் DIGITAL SIGNATURESகள் பயன்படுவதில்லை. ஆனால் கீழ்க்கண்ட நாடுகளில் E-SIGNATURESகள் ஒரு முக்கியமான ஆதாரமாக உள்ளது.

E-SIGNATURES சேவையுள்ள நாடுகள்:

இந்தியா

கனடா

தென் அமெரிக்கா

அமெரிக்கா

அல்ஜீரியா

துருக்கி

பிரேசில்

இந்தோனேசியா

மெக்சிகோ

சவுதி அரேபியா

உருகுவே

சுவிட்சர்லாந்து

சிலி

DIGITAL SIGNATURESகள் பெரும்பாலும் ASYMMETRIC CRYPTOGRAPHY எனப்படும் தொழில்நுட்பத்திற்கு பெரிதும் ஆதரிக்கின்றன. பல நேரங்களில் அது ஒரு பாதுகாப்பில்லாத மூலத்திலிருந்து வரும் குறுஞ்செய்திகளுக்கு கூட நல்ல முறையில் மதிப்பாய்வும் பாதுபாப்பும் தருகிறது. DIGITAL SIGNATURE எப்பொழுதும் குறுஞ்செய்தியைப் பெறுபவர்களுக்கு அந்த குறுஞ்செய்தியானது சரியான மூலத்திலிருந்துதான் வருகிறது என்பதை உறுதி செய்கிறது. நாம் DIGITAL SIGNATURESகளை எப்பொழுதும் HAND WRITTEN SIGNATURESகளுக்கு ஒப்பாகக் கூறலாம். சில சமயம் சரியான முறையில் நிறுவப்படும் DIGITAL SIGNATURE ஆனது HAND WRITTEN SIGNATURESயை விட சிறப்பானது மேலும் அதில் எந்தவித ஏமாற்றமும் செய்ய இயலாது. DIGITAL SIGNATURE ஆனது NON-REPUDATIONற்கு பெரிதும் ஆதரவளிக்கிறது. இங்கே NON-REPUDATION என்பது அனுப்புனர் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிய பிறகு அதை அனுப்பவில்லை என்று சாதிக்க இயலாது. DIGITAL SIGNATURE ஆனது மூன்று விதமான ALGORITHMSகளைக் கொண்டுள்ளது.

3 TYPES OF DIGITAL SIGNATURE ALGORITHM:

A KEY GENERATION ALGORITHM

A SIGNING ALGORITHM

A SIGNATURE VERIFYING ALGORITHM

DIGITAL SIGNATURE என்பது PROBABILISTIC POLYNOMIAL TIME ALGORITHMS அதாவது சுருக்கமாக(G, S, V) எனப்படுகிறது.

G – KEY GENERATORS

S – SIGNING

V – VERIYING OUTPUTS

எவ்வாறு டிஜிட்டல் கையொப்பம் இயங்குகிறது:

நாம் DIGITAL SIGNATURE பற்றி தெரிந்து கொள்ளும் முன்னே இங்கு CRYPTOGRAPHY எனப்படும் தொழில்நுட்பதைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இங்கே ENCRYPTION மற்றும் DECRYPTION எனப்படும் இரண்டு தொழில்நுட்பம் உள்ளது. ENCRYPTION எனப்படுவது ஒரு சொல்லை வேறொரு புரியாத வடிவத்திற்கு மாற்றுவதாகும். DECRYPTION எனப்படுவது புரியாத வடிவத்தில் இருக்கும் சொல்லை புரியக்கூடிய வடிவத்திற்கு மாற்றுவதாகும்.

TYPES OF ENCRYPTION:

SYMMETRIC ENCRYPTION

ASSYMETRIC ENCRYPTION

SYMMETRIC ENCRYPTION:

இங்கே நாம் ஒரு MESSAGEயை ஒரு KEY மூலமாக ENCRYPT செய்கிறோம். பிறகு பெறுநருக்கு(RECEIVER) அந்த KEYயை அனுப்புகிறோம். பெறுநர் அந்த KEY மூலமாக குறுஞ்செய்தியை DECRYPT செய்கிறார். இங்கே நாம் அனுப்பும் KEY மற்றவர் கையில் கிடைத்தால் நாம் அனுப்பும் செய்தியை அனைத்தும் அவரும் பார்க்க இயலும்.

ASSYMETRIC ENCRYPTION:

இங்கே இரண்டுவிதமான KEYகள் இருக்கும். ஒன்று PUBLIC KEY மற்றொன்று PRIVATE KEY ஆகும். இங்கே PUBLIC KEY என்பது USERNAME போன்றதாகும் மேலும் PRIVATE KEY என்பது PASSWORD போன்றதாகும். இங்கே PUBLIC KEYயும் PRIVATE KEYயும் ஒரு MATHEMATICAL ALGORITHM மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.

நாம் யாருக்காவது இம்முறையில் குறுங்செய்தி அனுப்ப வேண்டுமானால் நாம் முதலில்  குறுஞ்செய்தியை பெறுநரின் PUBLIC KEYக்கு அனுப்ப வேண்டும். பிறகு  பெறுநர் PUBLIC KEY உடன் தொர்புடைய அவருடைய PRIVATE KEYயை பயன்படுத்தி குறுஞ்செய்தியை DECRYPT செய்கிறார். இந்த முறையானது மிகவும் பாதுகாப்பானதாகும்.

DIGITAL SIGNATURE HASH ALGORITHM:

DIGITAL SIGNATURE ஆனது ASYMMETRIC ENCRYPTION முறையில் HASH ALGORITHM மூலமாக செயல்படுகிறது. இங்கே HASH ALGORITHM மூலமாக HASH CODEயை உருவாக்கி அதை PRIVATE KEYயுடன் இணைத்து ENCRYPT செய்து அதை DIGITAL SIGNATURE ஆக மாற்றுகிறோம்.

HOW TO VALID DIGITAL SIGNATURE:

நாம் நம்முடைய DOCUMENTயை HASH ALGORITHM மூலமாக ஒரு HASH CODEயை GENERATE செய்கிறோம். அந்த HASH CODEயை ஒரு PRIVATE KEYயை வைத்து ENCRYPT செய்து அதை DIGITAL SIGNATUREஆக பெறுநருக்கு அனுப்புகிறோம். தற்பொழுது பெறுநரிடம் DOCUMENT மற்றும் DIGITAL SIGNATURE என இரண்டு ஆவணங்களும் இருக்கும்.

பெறுநரும் அந்த DOCUMENTயை ஒரு HASH ALGORITHM வைத்து ஒரு HASH CODEயை GENERATE செய்கிறார். மேலும் DIGITAL SIGNATUREயை அனுப்புநரின் PUBLIC KEY மூலமாக DECRYPT செய்து ஒரு HASH CODE எடுக்கிறார்(ஏனெனில் ASYMMETRIC ENCRYPTION முறையில் PRIVATE KEY மற்றும் PUBLIC KEY ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும்). இந்த இரண்டு HASH CODEகளும் MATCH ஆனால் DIGITAL SIGNATURE ஆனது VALID ஆகும்.

APPLICATIONS OF DIGITAL SIGNATURES:

DIGITAL SIGNATURE ஆனது கீழ்க்கண்ட முக்கியமான APPLICATIONSகளைக் கொண்டுள்ளது.

  • AUTHENTICATION(அங்கீகாரம்)
  • INTEGRITY(உண்மைத்தன்மை)
  • NON-REPUDATION(நிராகரிக்க முடியாதது)

AUTHENTICATION:-

AUTHENTICATION எனப்படுவது நம்பகமான நபரிடமிருந்து குறுஞ்செய்தியானது வருகிறது என்று உறுதியளிக்கிறது.

INTEGRITY:-

INTEGRITY என்பது உண்மைத்தன்மையைக் குறிக்கிறது. இங்கே குறுங்செய்தி ஏதும் மாற்றப்படாமல் உண்மைத்தன்மையுடன் பெறுநரை அடைகிறது.

NON-REPUDATION:-

NON-REPUDATION எனப்படுவது ஒருவர் ஒரு விஷயத்தை மாற்ற முடியாது. உதாரணமாக ஒருவர் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி பின்னாளில் தான் அதை அனுப்பவில்லை என்று கூற இயலாது.

Share the knowledge