DEVOPS IN TAMIL | DEVOPS தொடர்ச்சியான தகவல் தொடர்பை நேர்த்தியாகக் கொடுக்கும் I BUILD IT I RUN IT மென்பொருளின் ஒரு புரட்சி

DEVOPS IN TAMIL | DEVOPS தொடர்ச்சியான தகவல் தொடர்பை நேர்த்தியாகக் கொடுக்கும் I BUILD IT I RUN IT மென்பொருளின் ஒரு புரட்சி

INTRODUCTION TO DEVOPS IN TAMIL:

ஒரு மென்பொருளை மேம்படுத்தப் பயன்படும் SET OF TOOLS எனப்படும் கருவிகளின் குழுமமே இந்த DEVOPS எனப்படும். இந்த DEVOPS எனப்படும் மென்பொருளில் தொடர்ச்சியாக தகவல் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் ஒரு வகையான BRANDED SLOGANயை பயன்படுத்துகிறார்கள் அது I BUILD IT I RUN IT என்பதேயாகும். இதன் அர்த்தமாவது இங்கே ஒரு குழு மென்பொருளை உருவாக்குகிறார்கள் மேலும் அவர்களே மென்பொருளை இயக்கவும் செய்கிறார்கள். அந்த நிபுணர் குழு மென்பொருளை உருவாக்கி மற்றவரிடம் கொடுக்க மாட்டார்கள் அவர்களே இயக்குவார்கள்.

WHAT IS DEVOPS IN TAMIL:

DEVOPS எனப்படுவது ஒரு TOOLS கிடையாது ஒரு தொழில்நுட்பம் கிடையாது இது ஒரு தொடர்ச்சியான பயிற்சியாகும். மேலும் DEVOPS பற்றி நாம் தெளிவாக தெரிந்து கொள்வதற்கு நாம் இதற்கு முன்னால் என்ன விதமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினோம் என்பதைப் பற்றிய வரலாற்றை அறிய வேண்டும். DEVOPS பற்றி புரிந்து கொள்வதற்கு நாம் இதற்கு முன்பு பயன்படுத்திய STRATEGY என்ன என்பதைப் பற்றி அறிய வேண்டும்.

devops in tamil
DEVOPS IN TAMIL

உதாரணமாகக் கூற வேண்டுமானால் நாம் முன்பு WATER FALL MODEL எனப்படும் தொழில்நுட்பத்தைப் பற்றி படித்தோம். இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் நாம் ஆன்லைனில் ஏதேனும் வண்டி பதிவு செய்ய வேண்டுமானால் நாம் அது சம்பந்தப்பட்ட அனைத்து விதமான செயல்படும் முறைகளையும் மற்றும் அதனுடைய கோப்புகளையும் எழுதி முடித்த பிறகு அதை DEVELOPMENT TEAM இடம் ஒப்படைப்பார்கள். அதன் பிறகு மென்பொருள் உருவாக்குபவர்கள் அது செயல்படும் விதத்தை அதாவது FUNCTIONAL SPECIFICATIONSயை அடிப்படையாக வைத்து மென்பொருள் உருவாக்குவார்கள். பிறகு அந்த மென்பொருளை உருவாக்கிய பிறகு அதை அவர்கள் TESTING TEAM இடம் கொடுத்து விடுவார்கள்.

TESTING TEAM அந்த மென்பொருளில் ஏதேனும் பிழை இருக்கிறதா என்று சோதிப்பார்கள். அதில் ஏதேனும் பிழை இருந்தால் அதை நீக்குவார்கள். பின்பு மென்பொருளானது OPERATIONAL TEAM இடம் ஒப்படைக்கப்படும் அங்கு அவர்கள் மென்பொருளை ஏதாவது DATA CENTER அல்லது CLOUD PROVIDERல் பதிவேற்றுவார்கள். பின்பு அந்த மென்பொருளைப் பற்றி FEEDBACK பயனரிடம் இருந்து வருவதற்கு கிட்டத்தட்ட ஆறு மாதத்தில் இருந்து ஒரு வருடம் வரை ஆகிறது. இது தான் WATER FALL MODEL ஆகும்.

TEAMS OF DEVOPS IN TAMIL:

அதன் பிறகு பல மாடல்கள் வந்த போதிலும் OPERATIONAL TEAM மற்றும் DEVELOPMENT TEAM எனப்படும் இரண்டு வகையான குழுக்களுக்கு பெரிய வித்தியாசம் இருக்க தோன்றியது. அதாவது DEVELOPMENT TEAM ஒரு குறிப்பிட்ட வேலையையும் OPERATIONAL TEAM ஒரு குறிப்பிட்ட வேலையையும் செய்வதால் இந்த இருவரிடையே சரியான தொடர்பில்லாமல் போனது. ஆகையால் இந்த மாதிரியான COMMUNICATION GAPயை நீக்குவதற்கு DEVOPS உருவானது. அதாவது DEVOPSல் அனைத்து விதமான செயல்களும் செயல்படும் DEVELOPMENT, DEBUGGING, OPERATIONAL, MONITORING என அனைத்தும் ஒரு குழுவின் மூலமே செயல்படும்.

ஒருவேளை தாங்கள் ஒரு DEVOPS பொறியாளராக இருந்தால் தாங்கள் அந்த மென்பொருளை உருவாக்குகிறீர்கள் என்று வைத்து கொள்வோம் தாங்களே அந்த மென்பொருளுக்கு தேவையான FUNCTIONSகளைப் பெற்று கோடிங் மூலம் மென்பொருள் உருவாக்குகிறீர்கள் பின்பு அதை மேம்படுத்துகிறீர்கள் பின்பு அதில் ஏதேனும் பிழை இருந்தால் அதை சரிசெய்கிறீர்கள் அடுத்த கட்டமாக அதை தாங்கள் CLOUD PLATFORMல் பதிவேற்றி MONITOR செய்வீர்கள்.

AGILE & DEVOPS IN TAMIL:

இந்த இருவேறுபட்ட எஜில் மற்றும் டெவ்ஆப்ஸ் என்ற இரண்டிற்கும் இடையே உள்ள குறிப்பிடத்தகுந்த வேறுபாடு என்னவெனில் எஜில் என்பது ஒரு குறிப்பிட்ட கணிப்பொறி மென்பொருளை எவ்வாறு உருவாக்குவது மற்றும் வழுங்குவது என்பது பற்றிய ஒரு நுணுக்கமாகும். அதேவேளையில் டெவ்ஆப்ஸ் என்பது நவீன தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் தானியங்கு செயல்பாட்டின் வழியாக ஒரு கோடிங்கை அல்லது குறியீட்டை எவ்வாறு தொடர்ந்து வரிசைப்படுத்துவது என்பதைக் பற்றி குறிப்பிடுகிறது.

PRINCIPLES OF DEVOPS IN TAMIL:

இந்த DEVOPS நான்கு விதமான முக்கிய கொள்கைகளைக் கொண்டுள்ளது. அவைகள் அனைத்தும் 4 PRINCIPLES OF DEVOPS என்று அழைக்கப்படுகிறது. இவைகள் அனைத்தும் DEVOPS எவ்வாறு திறம்படச் செயல்பட வேண்டும் என்று வரையறுக்கிறது. இந்த கொள்கைகள் அனைத்தும் MODERN SOFTWARES DEVELOPMENT என்பதை அடிப்படையாகக் கொண்டு கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது.

1. மென்பொருள் மேம்பாட்டு வாழ்க்கைச் சுழற்சி(SOFTWARE DEVELOPMENT LIFECYCLE) என்பதை தானியங்கி முறையில் செயல்பட உதவுகிறது. இதன் மூலமாக மென்பொருள் உருவாக்கத்தின் போது ஏற்படும் பிழைகள் அனைத்தும் தானியங்கி(AUTOMATION) முறையில் சரிசெய்யப்படுகிறது. மேலும் இது மென்பொருளின் TESTING, SOFTWARE BUILDS, RELEASE, ENVIRONMENT போன்ற அனைத்தையுமே கொண்டுள்ளது.

2. ஒரு சிறந்த DEVOPS TEAM மூலமாக நாம் திறம்பட இணைந்து செயல்படவும் (COLLABORATION) மற்றும் அருமையாக அனைவருடனும் தொடர்பு கொள்ளவும்(COMMUNICATION) முடியும். இந்த இணைந்து செயல்படுவதன் மூலமாக நெட்வொக்கினுள் இருக்கும் COMMUNICATION GAP தவிர்க்கப்படுகிறது. மேலும் அனைத்து விதமான மென்பொருள் குழுவிற்கும் இடையில் ஏற்படும் தொடர்பு அதிகரிக்கிறது.

3. DEVOPS மூலமாக நாம் தொடர்ச்சியான மற்றும் நிலையான மென்பொருள் முன்னேற்றத்தை வழங்க முடியும். இதைத்தவிர மென்பொருளில் தேவையற்ற அம்சங்கங்களை நாம் நீக்கி மென்பொருளின் செயல்பாட்டை துரிதப்படுத்த முடியும். இதைத்தவிர மென்பொருள் HIGH PERFORMANCE, MEANTIME TO RECOVER, REDUCE LATENCY போன்ற அனைத்தையுமே மேம்படுத்த முடியும்.

4. DEVOPS பயனர்களுக்கு என்ன தேவை என்பதில் கவனம் மேற்கொள்கிறது. பயனர்களுக்கு பின்னுாட்டம்(FEEDBACK) வழங்குவதன் மூலம் அவர்களின் கருத்தை அறிய முடியும். மேலும் DEVOPSன் பண்புகளான மேம்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு, தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் பயனர்களுக்கு என்ன தேவை என்பதை வழங்க முடியும்.  

FACTORS OF DEVOPS IN TAMIL:

மென்பொருள் நிறுவனத்தின் SOFTWARE உருவாக்கத்தில் பல சிக்கல் வருவதால் தற்பொழுது DEVOPSன் பயன்பாடும் நிறுவனங்களில் அதிகரித்துள்ளது. இதை இரண்டு விதமான காரணிகள் மூலமாக நாம் வகைப்படுத்தலாம்.

  1. தற்காலத்தில் நிறுவனங்கள் அனைத்தும் MONOLITHIC ARCHITECHTUREல் இருந்து MICROSERVICE ARCHITECTUREக்கு மாறுவதால் DEVOPS தேவை அதிகரித்துள்ளது.
  2. தற்காலத்தில் உருவாக்கப்படும் SOFTWARE PROJECTS அனைத்திற்கும் அதிகமான SOFTWARE TOOLS தேவைப்படுவதால் அதைத் தவிர்க்க நிறுவனங்கள் DEVOPSற்கு மாற வேண்டியுள்ளது.

மேற்சொன்ன காரணிகள் அனைத்தும் நான்கு நிலைகளில் நடைபெறுகிறது.

4 PHASES OF DEVOPS IN TAMIL:

  1. BRING YOUR OWN DEVOPS
  2. BEST IN CLASS DEVOPS
  3. DO IT YOURSELF DEVOPS
  4. DEVOPS PLATFORMS

BRING YOUR OWN DEVOPS:

இந்த BRING YOUR OWN DEVOPS எனப்படும் முதல் நிலையில் செயல்படும் ஒவ்வொரு குழுவும் தங்களுக்கென்று பிரத்யேகமான டூல்ஸ்களைக் கொண்டுள்ளது. இதில் சிக்கல் என்னவென்றால் எப்பொழுது ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்கள் இணைந்து ஒரு SOFTWARE PROJECTல் செயல்படுகிறதோ அப்பொழுது ஒருவர் பயன்படுத்தும் SOFTWARE TOOLS மற்றவர்களுக்கு அறிய வாய்ப்பில்லை.

BEST IN CLASS DEVOPS:

இந்த இரண்டாம் நிலை எனப்படும் BEST IN CLASS DEVOPSல் நாம் முதல் நிலையில் எதிர்கொள்ளும் சிக்கலை தவிர்க்கிறோம். அதாவது இங்கே நாம் ஒரு நிலையான SOFTWARE TOOLSஐ பயன்படுத்துகிறோம் அதன் மூலமாக ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்கள் ஒரே நேரத்தில் இணைந்து செயல்பட முடியும். ஆனால் இந்த டூல்ஸ் மென்பொருளில் சில பிழைகளை ஏற்படுத்தியது.

DO IT YOURSELF DEVOPS:

இரண்டாம் நிலையில் மென்பொருளில் ஏற்படும் பிழைகளைச் சரிசெய்ய இந்த முறை DO IT YOURSELF DEVOPS அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இது மிகப் பெரிய அளவில் பொட்செலவை ஏற்படுத்தியதால் நிர்வகிக்க ஏதுவாக இல்லை.

DEVOPS PLATFORM:

மேற்சொன்ன அனைத்து நிலைகளிலும் ஏற்படும் பிழைகளைச் சரிசெய்ய இந்த நிலை அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கே நாம் ஒரு PLATFORM உருவாக்குகிறோம் இதன் மூலமாக நாம் அனைத்து விதமான மென்பொருளையும் இந்த பிளாட்பார்ம் மூலமாக உருவாக்குகிறோம். இந்த SINGLE APPLICATION PLATFORM அணுகுமுறை குழு அனுபவத்தையும் வணிகத் திறனையும் மேம்படுத்துகிறது.

TOOLS OF DEVOPS IN TAMIL:

தாங்கள் DEVOPSல் ஒரு நிபுணராக விரும்பினால் பல வகையான TOOLSகள் உள்ளன. அவையாவன,

  • RELEASE TOOLS
  • CONFIGURATION MANAGEMENT TOOLS
  • ORCHESTRATION TOOLS
  • MONITORING VIRTUALIZATION & CONTAINERIZATION TOOLS
  • CODING TOOLS
  • TESTING TOOLS

இவ்வாறாக பலவகையான TOOLSகள் உள்ளன தாங்கள் இந்த TOOLSகளைப் படித்து தெளிவாவதன் மூலம் தாங்கள் DEVOPSல் பெரிய நிபுணர் ஆகலாம்.

Share the knowledge