DATA RISK IN TAMIL – கண் சிமிட்டும் நேரத்தில் காணாமல் போகும் இணைய தகவல்கள் EMERGING DATA RISK தமிழில்

DATA RISK IN TAMIL – கண் சிமிட்டும் நேரத்தில் காணாமல் போகும் இணைய தகவல்கள் EMERGING DATA RISK தமிழில்

DATA RISK IN TAMIL:

டிஜிட்டல் உலகத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குவது தரவுகள்(DATA) ஆகும். டிஜிட்டல் உலகில் நிலைத்திருக்க பெரும்பாலான இணைய வர்த்தகங்கள் தங்களை பல வழிகளில் அதாவது DATA COLLECTING, STORING, ANALYZING, MONETIZING, SHARING என்ற அனைத்து நிலைகளிலும் மற்றைய நிறுவனங்களை விட முன்னோக்கி இருத்தல் அவசியம்.

ஒரு வகையில் இந்த தரவுகள் அனைத்தும் வர்த்தக செயல்பாடுகளுக்கும் மற்றும் சேவைகளுக்கும் சிறந்த பலனளிக்க கூடியதாக உள்ளது. மற்றொரு வகையில் இது பல வழிகளில் அதாவது நம்பகத்தன்மை, பாதுகாப்பு, தனியுரிமை, கட்டுப்பாடு மற்றும் பயன்பாடு போன்றவற்றில் பின்தங்கி உள்ளது.

DATA RISK IN TAMIL
EMERGING DATA RISK IN TAMIL

பெரும்பாலோனோர் ஒரு புது விதமான முறையை உலகம் முழுக்க பின்பற்ற உதாரணமாக EUROPEAN UNION’S GENERAL DATA PROTECTION REGULATION AND THE CALIFORNIA CONSUMER PRIVACY ACT (AB 375) போன்றவற்றில் விருப்பமாய் உள்ளனர்.

வாடிக்கையாளர், வர்த்தக கூட்டாளி, முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் பலவிதமான தொழில் கூட்டமைப்புகள் போன்றவற்றின் நாணயம் மற்றும் நம்பிக்கையைப் பெற நாம் தகவல் மேலான்மையில் பழைய தொழில்நுட்பங்களை மறு மதிப்பீடு செய்து புதிய திறன் வாய்ந்த பாதுகாப்பான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

எந்த துறைகளை பாதிக்கிறது?

  1. ஒரு HEALTH CARE CENTER மற்றும் SOFTWARE COMPANY இந்த இரண்டிற்கும் இடையே உள்ள ஒப்பந்தமானது எப்பொழுது அந்த HEALTH CARE CENTER நோயாளியின் தகவல்களை நோயாளியின் அனுமதியில்லாமல் அந்த மென்பொருள் நிறுவனத்திற்கு விற்கிறார்களோ அப்பொழுது கேள்விக்குறியாகிறது.
  • ஒரு பிரபலமான E-COMMERCE வணிக நிறுவனமானது அதன் வாடிக்கையாளர்களின் தகவல்களை அவர்கள் அனுமதி இல்லாமல் மற்ற மூன்றாம் நபருடன் பகிரும் பொழுது அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது.

மேற்கண்ட விதமாக நாம் பல வகையான உதாரணங்களைக் கூறலாம். இவ்வாறு ஒருவரின் அனுமதி இல்லாமல் மற்றவருடன் பகிரப்படும் தகவல்கள் அந்த குறிப்பிட்ட வாடிக்கையாளரின் தனியுரிமையை பாதிக்கும் செயலாகும்.

DATA RISK IN TAMIL MNC:

பயனர்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவத்துடன் வர்த்தகம் செய்யும் பொழுது அவர்கள் அந்த நிறுவனத்திடமிருந்து வெளிப்படைத் தன்மையை எதிர்பார்க்கிறார்கள் மேலும் தரவுகளை கட்டுப்படுத்துவதற்கும் அதை நீக்குவதற்கும் உள்ள உரிமையை அதிகம் எதிர்பார்க்கிறார்கள். மேற்கண்ட வசதிகளை நிறுவனம் கொடுக்காமல் போனால் வாடிக்கையாளர்கள் அந்த நிறுவன தொடர்பை விட்டு விலகுகிறார்கள்.

நிறுவனங்கள் சில சமயம் எடுக்கும் கடினமான முடிவுகளும் வாடிக்கையாளர்களை பெரிதும் பாதிக்கின்றன. உதாரணமாக சில நிறுவனங்கள் எடுக்கும் REMOVING DATA MONETIZATION POLICY போன்றவற்றால் வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனத்திடமிருந்து விலகுகிறார்கள்.

வாடிக்கையாளரின் தனியுரிமையை பாதிக்கும் திட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் திடீர் ஒப்பந்தம் போன்றவைகளும் வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும்.

நிறுவனங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்:

நிறுவனங்கள் அனைத்தும் தரவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் அனைவகள் தரவுகளை ஒரு மதிப்புமிக்க பொக்கிஷமாக பேணிக் காக்க வேண்டும்.

நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்படும் தகவல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் அதன் மூலமாக அவர்களின் தகவல்கள் எந்தவொரு மூன்றாம் நபருடன் பகிரப்படவில்லை என்று வாடிக்கையாளருக்கு உறுதி செய்யலாம்

பல விதமான பயனர்களிடம் இருந்து பெறப்படும் ஏராளமான தகவல்களை நிர்வகிப்பதில் நிறுவனங்கள் அனைத்து சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அவசியம் ஆகும். இதன் மூலம் வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெறலாம்.

ஒரு தகவலை கையாள்வதில் உள்ள பல விதமான அபாயங்களை ஒரு நிறுவனம் ஆராய வேண்டும் ஒருவேளை நிறுவனத்திற்கே தெரியாமல் தகவல் திருடு போகலாம். ஆகையால் வாடிக்கையாளரின் தகவல் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் கூடாது.

பல விதமான செயற்கை நுண்ணறிவு நுணுக்கங்கள் மற்றும் ADVANCED SURVEILLANCE METHOD போன்றவற்றை பயன்படுத்தி தகவல்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுப்பது நிறுவனத்தின் கடமையாகும்.

DATA RISK IN TAMIL CYBER SECURITY:

எப்பொழுது தகவல் பாதுகாப்பு பற்றி நாம் ஆலோசிக்கிறோமே அப்பொழுது இணையத்தில் CYBER SECURITY மற்றும் CYBER CRIME பற்றிய தெளிவான புரிதல் இருத்தல் அவசியம்.

தற்காலத்தில் சமூக திருடர்களை விட இணைய திருடர்களே அதிகம் உள்ளனர். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த இணையத் திருடர்கள் அனைத்தும் படித்து பட்டம் பெற்ற திருடர்களாவர். ஆகையால் தங்களை மிகவும் நுாதனமான முறையில் ஏமாற்றுவார்கள்.

எந்த ஒரு நிறுவனமும் முழுமையான இணைய தாக்குதலில் இருந்து 100% தங்களை காத்துக் கொள்ள இயலாது. ஆனால் ஒரு சில குறிப்பிட்ட நடவடிக்கைகளைப் பின்பற்றும் பொழுது நாம் பெரும்பாலும் இந்த ஆபத்து வராமல் பாதுகாக்க முடியும்.

தற்காலத்தில் பல வகையான தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்துவதை போலவே இணைய திருடர்களும் பல வகையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பை உடைக்கின்றனர்.

தற்காலத்தில் பல வகையான ANTI-VIRUSகள் இருந்த போதிலும் அவை அனைத்தும் எளிதாக இணைய திருடர்களால் BYPASS செய்யப்படுகிறது. மேலும் தங்களுடைய SECURITY SOFTWARESகளை ஹேக்கர்கள் MISCONFIGURATION செய்வதன் மூலம் தங்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிறது.

DATA RISK IN TAMIL LEGACY SYSTEM:

LEGACY SYSTEM என்பது ஒரு வகையான OUTDATED SOFTWARE ஆகும். இந்த வகையான OUTDATED SOFTWARE மற்றும் OPERATING SYSTEMகளுக்கு எந்த விதமான UPDATESகளும் வழங்கப்பட மாட்டாது. இதனால் இதை தாக்குவது ஹேக்கர்களுக்கு மிகவும் எளிதான ஒரு செயலாகும்.

இந்த வகையான மென்பொருள் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம்களை பயன்படுத்துவதை நாம் தவிர்க்க வேண்டும். எப்பொழுதும் தங்களுடைய மென்பொருளை சரியான முறையில் அப்டேட் செய்து வைத்திருப்பது தங்களுக்கு கூடுதல் பாதுகாப்பை தரும்.

DATA RISK IN TAMIL RANSOMEWARE:

RANSOMEWARE என்பது மிகவும் அபாயகரமான தகவல் திருட்டாகும். இந்த மால்வேர் தாக்குவதன் மூலம் சம்பந்தப்பட்டவருடைய கணினியானது முற்றிலும் முடக்கப்படுகிறது. பிறகு இந்த வைரலை அனுப்பியவர் தாக்கப்படவரிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை கேட்டு அவரை மிரட்டுவார்.

இந்த மால்வேர் தாக்கியவரின் கணினி மட்டும் அல்லாமல் அதனை வைத்திருப்பவரும் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாக நேரிடும். தற்காலத்தில் இந்த மால்வேர் அதிக நபர்களை தாக்குகிறது.

DISTRIBUTED DENIAL OF SERVICE:

இந்த வகையான தாக்குதலானது தாங்கள் ஒரு சேவையை பெறுவதில் இருந்து தங்களை மறுக்கிறது. இதன் மூலமாக ஒருவர் முழுவதுமாக ஒரு சேவையைப் பெறவோ அல்லது கொடுக்கவோ முடியாது.

உதாரணமாக தாங்கள் ஒருவருக்கு தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து இணையம் மூலமாக மற்றவருக்கு பணப் பரிவர்த்தனை செய்யகிறீர்கள் என்றால் அந்த பரிவர்த்தனை இடையில் இருக்கும் ஒரு உலவாளி மூலமாக DDOS ATTACK முறையில் தடுக்கப்படும்.

VARIOUS INFORMATION TECHNOLOGY RISK:

தங்களுடைய வணிகமானது தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கினால் அதில் பல விதமான அபாயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இவ்வாறாக பல வகையான அபாயங்களில் இருந்து விடுபட முதலில் நாம் என்னென்ன அபாயங்கள் இருக்கின்றன. நாம் அதை எவ்வாறு சரிபடுத்துவது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

DATA RISK IN TAMIL THREATS:

பொதுவான IT THREATSகள் கீழ்க்கண்டவாறு பட்டியலிடப்படுகின்றன.

  • hardware and software failure – வன்பொருள் மற்றும் மென்பொருள் பலுதாதல் இதன் மூலமாக தகவல் இழப்பு ஏற்பட நேரிடுகிறது.
  • malware – இது ஒரு வகையான மாலிசியல் மென்பொருளாகும். இது தகவல் மற்றும் கணினியின் செயல்பாடுகளை முற்றிலும் அழிக்கிறது.
  • viruses – இது ஒரு வகையான கணினி மொழியில் எழுதப்பட்ட computer code ஆகும். இது தன்னைத்தானே பிரதி எடுத்து ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு பரவும் தன்மை கொண்டது.
  • spam, scams and phishing – இது ஒரு வகையான நம்பகத்தன்மை இல்லாத போலியான மின்னஞ்சல் ஆகும். இது மக்களை முட்டாளாக்கி அவர்களின் தகவலைத் திருடுகிறது.
  • human error – சரியில்லாத data processing மற்றும் தகவலை சரியாக கையாளாமை, அல்லது திடீரென மின்னஞ்சல் முகவரிக்கு வரும் வைரஸ் குறுஞ்செய்தியை திறப்பது போன்றவற்றால் இந்த பிழை ஏற்படுகிறது..

CRIMINAL IT THREAT:

HACKER – இந்த வகையான மக்கள் யாருக்கும் தெரியாமல் ஒரு நபரின் அனுமதியின்றி அவர்களின் தகவலை திருடுதல் போன்ற சமூக விரோத செயல்களைச் செய்கின்றனர்.

FRAUD – ஒரு தகவலை தவறான நோக்கத்தில் பயன்படுத்துபவர்.

PASSWORD THEFT – ஒரு கணினியின் ரகசிய கடவுச் சொல்லை மட்டும் திருடி தவறான நோக்கத்தில் பயன்படுத்துபவர்.

DENIAL OF SERVICE – இது ஒரு வகையான ஆன்லைன் தாக்குதல் ஆகும். இது ஒரு குறிப்பிட்ட சேவையை ஒரு நபருக்கு கிடைக்காமல் அதை மறுக்கிறது.

SECURITY BREACHES – இது பலவகையான பாதுகாப்பு சம்பந்தப்பட்ட வலையங்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களைக் குறிக்கிறது.

Share the knowledge