CS8493 OS IN TAMIL – CS8493 TYPES OF OPERATING SYSTEM IN TAMIL ARTICLE
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வகைகள்:
ஆப்பரேட்டிங் சிஸ்டம்கள் பல வகைப்படும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வேலைகளைச் செய்கின்றன.
BATCH OPERATING SYSTEM
MULTITASKTING OPERATING SYSTEM
MULTIPROGRAMMING OPERATING SYSTEM
REAL TIME OPERATING SYSTEM
DISTRIBUTED OPERATING SYSTEM
BATCH OPERATING SYSTEM:
இந்த வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பயனர் கணினியுடன் நேரடியாக தொடர்புகொள்ள மாட்டார். இங்கே ஒவ்வொரு வேலையும் தனித்தனியாக நடக்கின்றன. மேலும் அனைத்து வேலைகளும் முடிக்கப்பற்று முறையே ஆப்பரேட்டருக்கு(OPERATOR) அனுப்பி வைக்கப்படுகிறது. ஆப்பரேட்டர் அனைத்து வேலைகளையும்(JOBS) முறையே ஒரு குழுவாக(BATCH) முறைப்படுத்தி புராசஸருக்கு(PROCESSOR) அனுப்பி வைப்பார்.
MULTITASKTING OPERATING SYSTEM:
இங்கே பலவிதமான வேலைகள் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்படுகின்றன. மல்டிடாஸ்கிங் என்பது பல விதமான செயலிகளை ஒரே நேரத்தில் செயல்படுத்துவதாகும். உதாரணமாக தாங்கள் கணினியில் காணொளி, இசை, விளையாட்டு, வேர்டு செயலி, பெய்ண்ட் போன்ற அப்பிளிகேஷன்களை(SOFTWRES) ஒரே நேரத்தில் செயல்படுத்த முடியும்.
MULTIPROGRAMMING OPERATING SYSTEM:
இது ஒரு ப்ராசஸரை சரிபாதியாக பங்கு போட்டுக் கொள்வதாகும். ஒரு நினைவகத்தில்(RAM) எப்பொழுது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ப்ரோகிராம்கள் உள்ளதோ அப்பொழுது அந்த இரண்டு ப்ரோகிராம்களும் அந்த நினைவகத்தை சரியாக பங்குபோட்டுக் கொள்கின்றன.
REAL TIME OPERATING SYSTEM:
ரியல் டைம் ஆப்பரேட்டிங் சிஸ்டம்கள் அனைத்தும் அனைத்து விதமான அப்ளிகேஷன்களையும் ரியல் டைம்மில் பிராஸஸ் செய்கின்றது. இது ஒரு வேலையானது(JOBS) நினைவகத்தில்(RAM) இருந்து வர வர அதனை உடனுக்குடன் செயல்படுத்துகிறது. ரியல் டைம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆனது சுருக்கமாக RTOS என்றழைக்கப்படுகிறது.
DISTRIBUTED OPERATING SYSTEM:
இது பலவிதமான தனித்தனியான ப்ராசஸர்களையும் சிபியுக்களையும் கொண்டுள்ளது. இதன் மூலமாக ஒரு கோப்பானது(FILE) ஒரு கணினியிலிருந்து பல கணினிக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் அனைத்து விதமான கணினிகளில் இருந்தும் நாம் இந்த டிஸ்ட்ரிபூட்டிங் முறையில் கோப்பை பெற இயலும்.