SYSTEM CALL IN TAMIL – ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் SYSTEM CALL எவ்வாறு வேலை செய்கிறது

SYSTEM CALL IN TAMIL– ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் SYSTEM CALL எவ்வாறு வேலை செய்கிறது

SYSTEM CALL IN TAMIL:

SYSTEM CALL என்பது கணினி ப்ரோகிராமிங் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பற்றியது ஆகும். கணினி ப்ரோகிராம் ஆனது(C, C++, JAVA, PYTHON etc…) ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் கெர்னலிடம்(KERNEL) ஒரு சேவைக்கான(SERVICE) வேண்டுகோளை விடுக்கிறது. சிஸ்டம் கால்கள் அனைத்தும் பெரும்பாலும் ASSEMBLY LANGUAGE INSTRUCTION ஆக காணப்படுகிறது. UNIX SYSTEM CALLகள் அனைத்தும் பெரும்பாலும் C/C++ ப்ரோகிராம்களில் இருந்து நேரடியாகப் பெறப்படுகின்றன.

SYSTEM CALL IN TAMIL
SYSTEM CALL IN TAMIL

SYSTEM CALL பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு முன்னால் நமக்கு தெரிய வேண்டியது கணினி ப்ரோகிராம் மொத்தம் இரு நிலைகளில் இயங்குகிறது. அவையாவன 1.USER MODE 2.KERNEL MODE

USERMODEல் கணினி ப்ரோகிராம் ஆனது நேரடியாக MEMORY அல்லது HARD DISK DEVICES உடன் நேரடியாக தொடர்பு கொள்ள இயலாது. ஆனால் ப்ரோகிராம் ஆனது KERNEL MODEல் இயங்கினால் அதனால் கணினி நினைவகம் மற்றும் மற்ற வன்பொருள்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியும். இந்த KERNEL MODE ஆனது PRIVILEGED MODE என்றும் அழைக்கப்படுகிறது.

ப்ரோகிராம் ஆனது கெர்னல் நிலையில் இயங்கும் பொழுது ஏதேனும் பிழை ஏற்பட்டால் மொத்த சஸ்டத்திலும் பிழை ஏற்படும். ஆனால் ப்ரோகிராம் ஆனது USER MODEல் இயங்கும் பொழுது ஏதேனும் பிழை ஏற்பட்டால் மொத்த சிஸ்டத்திலும் பிழை ஏற்படாது. ஆகையால் USER MODE ஆனது SAFER MODE என்றும் அழைக்கப்படுகிறது.

USERMODE ஆனது கணினியில் இயங்கும் பொழுது அது சில RESOURCEகளை உதாரணமாக வன்பொருள் மற்றும் கணினி நினைவகம் போன்றவற்றை பெற வேண்டியுள்ளதால் அது ஆப்பரேட்டிங் சிஸ்டத்திடம் அனுமதி கேட்கிறது. இவ்வாறு அனுமதி கேட்கும் பொழுது ப்ரோகிராம் ஆனது USER MODEல் இருந்து KERNEL MODEற்கு மாறுகிறது. இவ்வாறு ப்ரோகிராம் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுவதை நாம் CONTEXT SWITCHING என்று அழைக்கிறோம். மேலும் இது SYSTEM RESOURCEகளை ACCESS செய்வதை நாம் SYSTEM CALL என்றழைக்கிறோம்.

கணினி ப்ரோகிராம்———->சேவைக்கான வேண்டுகோள்————->OS KERNEL

இது கணினியின் வன்பொருள் சம்பந்தமுடைய செயல்களையும் செய்கிறது.

  1. ஒரு புதிய PROCESS உருவாக்குவது.
  2. KERNELல் PROCESSING SCHEDULING உருவாக்குவது.

இது SYSTEM CALL ஆனது PROCESS மற்றும் OPERATING SYSTEMற்கு இடையில் ஒரு இணைப்பு பாலமாக உள்ளது. பெரும்பாலான கணினிகளில் SYSTEM CALLஆனது USER SPACE PROCESSல் இருந்து உருவாக்கப்படுகிறது. SYSTEM CALLற்கு ஆறு வகைகள் உள்ளன.

SYSTEM CALL IN TAMIL TYPES:

  1. PROCESS CONTROL
  2. FILE MANAGEMENT
  3. DEVICE MANAGEMENT
  4. INFORMATION MAINTANENCE
  5. COMMUNICATION
  6. PROTECTION

SYSTEM CALLS ஆறு வகைகள்:

  1. PROCESS CONTROL
  2. FILE MANAGEMENR
  3. DEVICE MANAGEMENT
  4. INFORMATION MAINTENANCE
  5. COMMUNICATION
  6. PROTECTION

பெரும்பாலான UNIX ஆப்பரேட்டிங் சிஸ்டம்களில் SYSTEM CALLகள் கெர்னல் நிலையில்(KERNAL MODE), PROCESSORன் EXECUTED MODEயை அதிகார நிலைக்கு மாற்றுவதன் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. இங்கு சிறப்பம்சம் என்னவென்றால் SYSTEM CALLல் நமக்கு CONTEXT SWITCHINGன் அவசியம் தேவையில்லை. CONTEXT SWITCHING என்பது PROCESSயை நாம் அதே நிலையில் சேமித்து வைத்து பிறகு தேவைப்படும் பொழுது உபயோகிப்பதாகும்.

MULTITHREADED PROCESSல் சிஸ்டம் கால்கள் அனைத்தும் பல்வேறு THREADSகளில் உருவாக்கப்படுகிறது. இந்த வகையான SYSTEM CALLகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் அதனுடை RUNTIME ENVIRONMENT போன்றவற்றைச் சார்ந்து உள்ளன. இங்கே OS ஆனது நான்கு வகையான முக்கிய நிலைகளைக்(MODE) கொண்டுள்ளது.

TYPICAL 4 MODELS OF OS:

MANY TO ONE MODEL

ONE TO ONE MODEL

MANY TO MANY MODEL

HYBRID MODEL

SYSTEM CALL வேலை செய்யும் முறை:

SYSTEM CALL வேலை செய்யும் முறை பற்றி அறிந்து கொள்ள மிகச் சரியான உதாரணம் ஒரு கோப்பிலிருந்து மற்றொரு கோப்பிற்கு தகவலை பிரதி எடுப்பதை கூறலாம்.

METHODS IN COPYING ONE FILE DATA TO ANOTHER FILE:

STEP 1: முதலில் சிஸ்டம் ஆனது இரண்டு கோப்புகளின் பெயரைக்(FILE NAMES) கேட்கிறது. அதவாது பிரதி எடுக்கும் கோப்பு(SOURCE FILE) பிரதி மாற்றப்படும் கோப்பு(DESTINATION FILE)

STEP 2: நாம் கணினிக்கு தேவையான பைலின் பெயரைக் கொடுத்த பிறகு கணினியானது அந்தக் கோப்பு கணினியில் உண்மையிலேயே சேமித்து வைக்கப்பட்டுள்ளதா என்று சோதிக்கும்.

STEP 3: ஒரு வேளை கோப்பானது கணினியில் சேமித்து வைக்கப்படவில்லை என்றால் அல்லது கணினியானது பைலை எடுக்க முடியவில்லை என்றால் கணினியானது குறுஞ்செய்தி பிழையை காட்டும்.

STEP 4: இங்கே பிரதி எடுக்கும் பணி தொடங்குகிறது. அதாவது கோப்பு(FILE) ஒரு மூலத்திலிருந்து(SOURCE FILE) மற்றொரு மூலத்திற்கு(DESTINATION FILE) பிரதி எடுக்கப்படுகிறது.

STEP 5: ஒரு கோப்பை(FILE) பிரதி எடுத்து முடித்த பிறகு ப்ரோகிராம் ஆனது பைலை மூடுகிறது பின்பு SYSTEM CALLற்கு ஒரு குறுஞ்செய்தி எழுதி அனுப்புகிறது.

TO KNOW MORE ABOUT SYSTEM CALLS VISIT HERE…

Share the knowledge