WHAT IS CLOUD COMPUTING IN TAMIL-தகவல் சேமிப்பில் முன்னோடியான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒரு பார்வை

  1. WHAT IS CLOUD COMPUTING IN TAMIL-தகவல் சேமிப்பில் முன்னோடியான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒரு பார்வை

HISTORY OF CLOUD COMPUTING IN TAMIL:

கிளவுட் கம்யூட்டிங் தொழில்நுட்பமானது ஆனது அமேசான் நிறுவனத்தால் பிரபலமானது. அமேசான் நிறுவனம் 2006ம் ஆண்டு ELASTIC COMPUTE CLOUD எனும் தொழில்நுட்பத்தை வெளியிட்டதன் மூலம் கிளவுட் கம்யூட்டிங் தொழில்நுட்பம் பிரபலமானது. “CLOUD COMPUTING” எனும் சொல்லானது 1996ம் ஆண்டு முதன்முதலாக COMPACT நிறுவனத்தால் பயன்படுத்தப்பட்டது. கிளவுட் கம்யூட்டிங் ஆனது அனைத்து விதமான கணினி சாதனங்களின் இணைப்புடைய நெட்வொர்க்காக கருதப்படுகிறது. இது 1977ம் ஆண்டு ARPHANET என்றும் 1981ம் ஆண்டு CSNET என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ARPHANET & CSNET என்ற இரண்டும் INTERNETன் முன்னோடியாகக் கருதப்படுகிறது.

CLOUD COMPUTING IN TAMIL
CLOUD COMPUTING IN TAMIL

1993ம் ஆண்டு காலகட்டத்தில் “CLOUD” என்ற சொல்லானது “DISTRIBUTED COMPUTING”ல் மட்டும் பயன்படுத்தப்பட்டது. 2006ம் ஆண்டு அமேசான் நிறுவனத்தைத் தொடர்ந்து 2008ம் ஆண்டு கூகுள் நிறுவனமானது தனது GOOGLE APP ENGINEயை உருவாக்கியது. பிறகு 2008ம் ஆண்டு மத்தியில் நாசாவின் நெபுலா கிளவுட் கம்யூட்டிங் தொழில்நுட்பத்தில் OPEN SOURCE SOFTWARE உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனமானது MICROSOFT AZURE எனும் மென்பொருளை உருவாக்கியது. பிறகு 2010 ஜுலை வாக்கில் RACKSPACE HOSTING மற்றும் NASA என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து OPENSTACK எனப்படும் OPEN SOURCE SOFTWARE உருவாக்கியது. பின்பு 2011ம் ஆண்டு மார்ச் மாதம் IBM நிறுவனமானது IBM SMARTCLOUD எனப்படும் கிளவுட் மென்பொருளை உருவாக்கியது.

Cloud computing  என்பது அனைத்து விதமான கணினி மூலங்கள்(computer resource) மற்றும் தகவல் சேமிப்பு(data storage) போன்ற அனைத்தின் ON DEMAND AVAILABILITY சேவை ஆகும். இங்கே ON DEMAND AVAILABILITY என்பது பயனரின் நேரடி தலையீடு இல்லாமல் நடைபெறும் சேவையாகும். கிளவுட் கம்யூட்டிங் தொழில்நுட்பத்தில் அனைத்து தகவல் மையங்களும்(DATA CENTER) இணையத்தில் உள்ள அனைத்து பயனர்களுக்கு கிடைக்கிறது. தற்காலத்தில் அனைத்து தகவல்களும் மைய சர்வரிலிருந்து அனைத்து கிளவுடுகளுக்கும் DISTRIBUTED தொழில்நுட்பம் மூலமாக பிரித்து அனுப்படுகிறது.

கிளவுட் கம்யூட்டிங்கில் ENTERPRISE CLOUD என்பது ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டும் கிடைக்கப்படுவதாகும். அதைப்போல PUBLIC CLOUD என்பது அனைத்து நிறுவனங்களுக்கும் கிடைக்கப்படுவதாகும். கிளவுட் கம்யூட்டிங் என்பது அனைத்து விதமான ஆன்லைன் மூலங்களின்(RESOURCES) பகிர்வாகும். இது முக்கியமாக COHERENCE(ஒத்திசைவு) மற்றும் ECONOMICS OF SCALE(பொருளாதார மதிப்பீடு) என்ற இரண்டையும் சிறப்பாக நிறைவேற்ற பயன்படுகிறது. கிளவுட் கம்யூட்டிங்கின் வரவால் பல விதமான மென்பொருள்கள்(APPLICATIONS) இணையத்தில் சிறப்பாக இயங்குகின்றன.

CLOUD COMPUTING SHARE CHARACTERISTICS WITH FOLLOWING TECHNOLOGY:

  • CLIENT-SERVER MODEL
  • COMPUTER BUREAU
  • GRID COMPUTING
  • FOG COMPUTING
  • MAINFRAME COMPUTER
  • UTILITY COMPUTING
  • PEER TO PEER TECHNOLOGY
  • GREEN COMPUTING
  • CLOUD SANDBOX

Cloud Computing Based on Cloud Service:-

1. IaaS

2. PaaS

3. SaaS

IaaS (Infrastructure-as-a-Service) :

இது CLOUD IT மூலம் செயல்படும் அடிப்படை கட்டமைப்புகளை கொண்டு இந்த IaaS Cloud Computing செயல்படுகின்றன. இந்த சேவையை பயன்படுத்தும் நிறுவனங்கள் Amazon, Rackspace, Flexiscale etc. இதன் மூலமாக நாம் கீழ்கண்ட இணைய சேவைகளை பெற முடியும் Networking features, Computers, Data storage spaces. இது வளைந்து கொடுக்கும் தன்மையையும் IT Resourceயை நிர்வகிக்கும் தன்மையையும் கொடுக்கும்.

PaaS (Platform-as-a-Service):

இது ஒரு Developement Platform என்று அழைக்கப்படுகிறது, இது கீழ்கண்டவற்றை கொண்டுள்ளது an operating system, programming language, database, and web server. இதன் மூலம் பயனாளர் தங்களது சொந்த Cloud சேவையை உணர முடியும் . இதன் மூலமாக நாம் கீழ்கண்ட சேவைகளை பெற முடியும் Google App Engine, Microsoft Azure, Salesforce etc.

SaaS (Software-as-a-Service) :

SAAS என்பது ஒரு SOFTWARE DISTRIBUTION MODEL ஆகும். இங்கே THIRD PARTY எனப்படும் மூன்றாம் நபரோ அல்லது அமைப்போ ஒரு அப்ளிகேஷனை HOST செய்து இணையத்தில் அனைவருக்கும் கிடைக்கச் செய்கிறது. இது Service Providerஆல் நடத்தப்படும் சேவைகளை குறிக்கிறது.இதன் மூலமாக நாம் கீழ்கண்ட சேவைகளை பெற முடியும் Gmail, Google Docs, NetSuite etc.

WHAT IS CLOUD COMPUTING IN TAMIL?

கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing) என்ன என்பதனை மிக எளிமையாக புரிந்துகொள்ள வேண்டுமா? நமது வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை தயாரிப்பதற்கு ஒரு காற்றாலை அல்லது மின்சாரம் தயாரிக்கக்கூடிய ஒரு அமைப்பை நமது வீட்டிலேயே உண்டாக்குகிறோம் என வைத்துக்கொள்வோம். அந்த அமைப்பை உருவாக்கவும் பராமரிக்கவும் ஆகின்ற செலவானது நாம் பயன்படுத்துகின்ற மின்சாரத்தை அரசாங்கம் உள்ளிட்ட வெளி அமைப்புகளில் இருந்து வாங்கினால் பெறுவதற்கு ஆகின்ற செலவை விட மிக மிக அதிகாமாக இருக்கும்.

இதே ஐடியா தான் கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing) உருவாவதற்கும் மிக முக்கிய காரணம். கூகுள் (Google) போன்ற மிகப்பெரிய கம்பெனிகள் கிளவுட் கம்ப்யூட்டிங் என்ற அமைப்பை உருவாக்குகின்றன. அவை அதிக செயல்திறன் கொண்ட சர்வர்ஸ் (Servers), ஸ்டோரேஜ் (Storage), டேட்டாபேஸ் (database), நெட்வொர்க்கிங் (networking), சாப்ட்வேர் அப்ளிகேஷன் (software application) போன்றவற்றை வழங்குகின்றன. இவற்றை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனில் மிகக்குறைந்த பணத்தை கொடுத்து இன்டர்நெட் (Internet) உதவியுடன் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

கிளவுட் கம்ப்யூட்டிங் என்பது தற்போது நாம் பயன்படுத்திக்கொண்டு இருக்கக்கூடிய கணினி மற்றும் அப்ளிகேஷன் முதலியவற்றினை முன்னேறிய வகையில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை குறிக்கின்ற சொல். இன்டர்நெட் உடன் இணைக்கப்பட்டு இருக்கின்ற எந்தவொரு கிளவுட் கம்ப்யூட்டிங் இல் இருக்கக்கூடிய ஸ்டோரேஜ் , அப்ளிகேஷன் உள்ளிட்டவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியும். மிகப்பெரிய நிறுவனங்கள் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்துக்காக மிகப்பெரிய இடங்களில் கோடிக்கணக்கான எலக்ட்ரானிக் கருவிகளை ஒருங்கிணைத்து அவற்றினை பராமரித்து வருகின்றன.

LOW COST:-

ஒரு இணையதளத்தை உருவாக்க வேண்டுமெனில் அதற்குரிய பைல்களை சேமித்துவைக்க ஸ்டோரேஜ் இடம் தேவை. அதற்காக அதிக செயல்திறன் கொண்ட கணினி மற்றும் ட்ரைவ்களை வாங்கி 24 மணிநேரமும் ON செய்தே வைத்திருப்பதும் அதற்க்கு பராமரிப்பு வேலை செய்வதும் அதிக செலவு மற்றும் வேலைப்பளுவை ஏற்படுத்தும். அதற்கு நீங்கள் மிகப்பெரிய நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூட்டிங் மூலமாக மிகக்குறைந்த விலையில் தேவையான ஸ்டோரேஜ்யை வாங்கிக்கொள்ள முடியும்.

HIGH SPEED:-

கோடிக்கணக்கான சர்வர்ஸ், அதிவேக தொழில்நுட்பம், குளிர்சாதன வசதி, பராமரிக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கிளவுட் கம்ப்யூட்டிங் இல் இருப்பதனால் அதிவேக சேவையினை உங்களால் பெற முடியும்.

PERFORMANCE:-

மிகப்பெரிய நிறுவனங்கள் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவையினை வழங்குவதற்காக மிகப்பெரிய டேட்டா சென்டர்களை நிர்வகித்து வருகின்றன. அங்கு தற்போதைய தொழில்நுட்ப மேம்பாடுகள் ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேரில் செய்யப்படுகின்றன. நீங்கள் தனியாக டேட்டா சென்டர்கள் வைத்திருக்கும் போது இதனை செய்தால் அதிகம் செலவு ஏற்படும். செய்யாவிட்டால் வேகம் உள்ளிட்டவற்றில் குறைபாடு ஏற்படும்.

SECURITY:-

இணைய பாதுகாப்பு என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. மிகப்பெரிய நிறுவனங்கள் தாங்களாகவே தங்களுடைய டேட்டா சென்டர்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்திக்கொண்டே இருக்கும். ஆகையினால் உங்களது தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பானதாக இருக்கும்.

CLOUD COMPUTING TOOLS:-

Cloud computing மூலமாக சிறந்த முறையில் இணைந்து செயலாற்ற முடியும். இது சிறு மற்றும் நடுத்தர வணிகர்களை சிறந்த முறையில் நிர்வகித்து முடிவுகளை தருகிறது. சந்தையில் பலவிதமான CLOUD TOOLகள் காணப்படுகின்றன Google Drive, Salesforce, Basecamp, Hive. இந்த CLOUD TOOLகள் பயனாளர்களின் கோப்புகளை மாற்ற உருவாக்க பயன்படுகிறது.இதைத் தவிர மேலும் பல விதமான கிளவுட் கம்யூட்டிங் டூல்கள் இணையத்தில் உள்ளன. இவைகள் அனைத்தும் கிளவுடில் தகவலை நிர்வகிக்கவும் மற்றும் மேற்பார்வையிடவும் பயன்படுகிறது. அவற்றில் சில முக்கிய டூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • Amazon Cloudwatch. Amazon Web Services offers to monitor for cloudresources and applications running on Amazon AWS.
  • Microsoft Cloud Monitoring.
  • AppDynamics.
  • BMC TrueSight Pulse.
  • CA Unified Infrastructure Management (CA Technologies)
  • New Relic.
  • Hyperic.
Share the knowledge