CBSE XI PYTHON – FUNDAMENTALS OF PYTHON IN TAMIL
இங்கே பைத்தான் ப்ரோகிராம் மற்றும் அதனுடைய அடிப்படைகளைப் பற்றி நன்றாக விளக்கியுள்ளேன். தாங்கள் எந்த ஒரு மொழியிலும் நிபுணர் ஆக வேண்டும் என்றால் முதலில் அந்த மொழியினுடை தன்மை பற்றி நன்கு அறிந்து வைத்திருத்தல் வேண்டும்.
இங்கே நாம் பலவிதமான அடிப்படைகளைப் பற்றி பார்க்க உள்ளோம். அவையாவன.
- CHARACTER SET (எழுத்துக்கள், எண்கள், சிறப்புக் குறியீடுகள், வெற்று இடம்)
- TOKEN (ப்ரோகிராமின் ஒரு தனிப்பட்ட பகுதி)
- KEYWORDS (சிறப்பாக ஒதுக்கப்பட்ட வார்த்தைகள்)
- IDENTIFIER (அடிப்படை கட்டமைப்பு பகுதி)
- LITERALS/VALUES (நிலையான மதிப்பு)
மேற்கண்ட அனைத்து விதமான பைத்தான் மொழியின் அடிப்படை அம்சங்கள் மற்றும் அதன் துணை அம்சங்களை ஒவ்வொன்றாக நாம் பார்க்க இருக்கிறோம்.
CHARACTER SET:
இங்கே CHARACTER SET என்பது பைத்தான் மொழியின் நாம் பயன்படுத்தும் அனைத்து விதமான எழுத்துக்கள், எண்கள், சிறப்புக் குறியீடுகள், வெற்று இடம் போன்ற அனைத்தையும் கொண்டதாகும்.
TOKEN:
இது மிகவும் முக்கியமானதாகும். இது பைத்தான் மொழியின் ஒரு தனிப்பட்ட பகுதியாகக் கருதப்படுகிறது. இதன் மூலமாக நாம் பல விதமான செயல்களைச் செய்கிறோம். இங்கே டோக்கன் ஆனது ஐந்து வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
5 TYPES OF TOKENS:
- KEYWORD
- IDENTIFIER
- LITERALS
- OPERATOR
- PUNCTUATORS
KEYWORD:
ஒரு மொழிக்கு எழுத்து எவ்வளவு முக்கியமோ அதைப் போல பைத்தான் மொழிக்கு KEYWORD மிகவும் முக்கியமாகும். பைத்தானில் மொத்தம் 33 KEYWORDS உள்ளன. இவற்றின் உதவியால் மட்டுமே நாம் ப்ரோகிராம் எழுத முடிகிறது.
IDENTIFIER:
இது ஒரு ப்ரோகிராமின் ஒரு அடிப்படை கட்டமைப்பு பகுதியாக உள்ளது. இங்கே நாம் பல விதமான IDENTIFIER பயன்படுத்துகிறோம். பைத்தானில் பயன்படுத்தப்படும் VARIABLES, FUNCTIONS, CLASS, OBJECTS அனைத்தும முக்கியமான பைத்தான் IDENTIFIER ஆகும்.
RULES OF IDENTIFIERS:
- பைத்தான் வார்த்தையின் முதல் எழுத்து ஒரு ALPHABET அல்லது UNDERSCORE_ ஆக இருக்க வேண்டும்.
- இந்த முதல் எழுத்தைத் தவிர மற்ற எழுத்து எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
- IDENTIFIER NAME ஆனது எந்த விதமான சிறப்பு குறியீடு மற்றும் வெற்று இடங்களைக் கொண்டு இருக்க கூடாது.
- IDENTIFIER NAME ஆனது நாம் பைத்தான் மொழியில் பயன்படும் KEYWORD NAME ஆக இருக்கக் கூடாது.
- IDENTIFIER NAMEகள் அனைத்தும் பைத்தான் மொழியில் CASE SENSITIVE ஆகும். CASE SENSITIVE என்றால் சிறிய எழுத்து மற்றும் பெரிய எழுத்து அனைத்தும் வேறு வேறாகும்.
உதாரணம்:
welcome(அனைத்தும் சிறிய எழுத்து)
Welcome(முதல் எழுத்து மட்டும் பெரியது)
WELCOME(அனைத்தும் பெரிய எழுத்து)
மேற்குறிப்பிட்ட இந்த மூன்று வார்த்தைகளும் பைத்தான் மொழியில் வேறுவேறானவையாகும்.
LITERALS/VALUES:
LITERALS எனப்படுவது பைத்தானில் ஒரு “நிலையான மதிப்பாகும்”. இந்த LITERALSகள் அனைத்தும் பல வகைப்படும்.
நான்கு வகையான LITERALS:
- NUMERIC LITERALS
- STRING LITERALS
- BOOLEAN LITERALS
- SPECIAL LITERALS
STRING LITERALS:
STRING LITERALS எனப்படுவது பைத்தானில் SINGLE QUOTES அல்லது DOUBLE QUOTES உடன் இணைந்து வருவதாகும்.
உதாரணம்:
SINGLE QUOTES = ‘TAMIL NADU’
DOUBLE QUOTES = “TAMIL NADU”
மேற்சொன் இந்த இரண்டுமே அதாவது SINGLE QUOTES AND DOUBLE QUOTES ஒரே மதிப்பாகும்.