CBSE CLASS XI IN TAMIL – NCERT COMPUTER SUBJECT CHAPTER 1 IN TAMIL
இந்தப் பாடத்தில் தாங்கள் கணிணி சம்பந்தமான அனைத்து விதமான அடிப்படை அறிவையும் பெறப் போகிறீர்கள். தாங்கள் இங்கே கணிப்பொறியின் உபகரணங்களான INPUT, OUTPUT, RAM, PROCESSOR, SECONDARY MEMORY போன்ற அனைத்தையும் பற்றி அறியப் போகிறீர்கள் அதைத் தவிர OPERATING SYSTEM என்றால் என்ன என்றும் மேலும் எத்தனை விதமான OPERATING SYSTEMS உள்ளன என்றும் அறிவீர்கள். கணிணி உலகத்தில் உள்ள மென்பொருள் மற்றும் அதனுடைய வகைகளைப் பற்றியும் அறிய உள்ளீர்கள்.
INPUT:
இது கணிணியின் உள்ளீட்டுச் சாதனமாகும் மேலும் நாம் அனைத்து விதமான கட்டளைகளையும் நாம் இதன் மூலமாக அளிக்கிறோம். கணிணியில் முக்கிமான உள்ளீட்டுக் கருவிகளாவன MOUSE மற்றும் KEYBOARD ஆகும்.
OUTPUT:
இது கணிணியின் வெளியீட்டுச் சாதனமாகும் மேலும் நாம் அனைத்து விதமான தகவல்களைகளையும் நாம் இதன் மூலமாக HARDCOPY அல்லது SOFTCOPY மூலமாகப் பெறுகிறோம். கணிணியில் முக்கிமான உள்ளீட்டுக் கருவிகளாவன PRINTER மற்றும் MONITOR ஆகும்.
PROCESSOR:
இது கணிணியின் முக்கியமான உறுப்பாகும் சுருங்கக்கூறினால் இது கணிணியின் இதயம் போல செயல்படுகிறது.
RAM:
இது கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கிறது. இது அனைத்து விதமான செயல்களையும் துரிதப்படுத்த உதவுகிறது. மேலும் இது ஒரு VOLATILE MEMORY ஆகும். தகவல்கள் அனைத்தும் கணிணியை RESTART செய்தால் அழிந்துவிடும்.