BLOCKCHAIN IN TAMIL – இணையத்தில் பணப் பரிமாற்றத்தில் பட்டய கெளப்பும் பிளாக் செயின் தொழில்நுட்பம் ஒரு பார்வை

BLOCKCHAIN IN TAMIL – இணையத்தில் பணப் பரிமாற்றத்தில் பட்டய கெளப்பும் பிளாக் செயின் தொழில்நுட்பம் ஒரு பார்வை

HISTORY OF BLOCKCHAIN IN TAMIL:

டேவிட் சாம் எனப்படும் ஒரு கிரிப்டோகிராபிக் அறிவியலார் முதன் முதலில் 1982ம் ஆண்டு பிளாக்செயின் மாதிரியான ஒரு புரோட்டோகாலை முதன் முதலில் தனது “COMPUTER SYSTEM ESTABLISHED, MAINTAINED AND TRUSTED BY MUTUALLY SUSPICIOUS GROUP”ல் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 1991ம் ஆண்டு இந்த பிளாக் செயினின் பாதுகாப்பை பற்றி மேலும் ஆராய்ந்து ஸ்டார்ட் ஹாபெர் மற்றும் ஸ்காட் ஸ்டார்நெட்டா என்ற அறிவியலாளர்கள் தங்களது கருத்தை வெளியிட்டனர். அவர்கள் ஒரு புது வகையான தொழில்நுட்பத்தை உருவாக்க விரும்பினர் அதாவது நாம் கோப்பு பறிமாற்றம் செய்யும் போது கோப்பிற்கு எந்த சேதமும் ஏற்படாத வண்ணம்(DOCUMENT TIMESTAMP TAMPERED) ஒரு முறையை உருவாக்க விரும்பினர்.

அதனைத் தொடர்ந்து திருப்புமுனையாக 1992ம் ஆண்டு சில ஆராய்ச்சியாளர்கள் ஹாபர், ஸ்டோர்நேட்டா, டேவ் பேயர் போன்றோர்கள் “MERKEL TREES (OR) HASH TREE” எனப்படும் ஒரு கிரிப்டோகிராபிக் முறையை உருவாக்கினர். இந்த MERKEL TREE என்பது ஒரு TREE ஆகும். இது கிரிப்டோகிராபியில் ஒவ்வொரு LEAF NODEம் அதன் தலைமை CRYPTOGRAPHIC HASH NODEடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த தொழில்நுட்பம் பிளாக்செயினில் உள்ள அனைத்து விதமான கோப்புகளும்(LEAF NODE) தலைமை பிளாக்குடன்(HASH NODE) இணைக்க உதவியது. இது பிளாக்செயின் தொழில்நுட்பத்திற்கு மிகப்பெரிய அடித்தளமிட்டது.  

BLOCKCHAIN CONCEPTUALIZED IN 2008:

பல்வேறு விதமான ஆராய்ச்சிகள் முன்பு செய்யபட்ட போதிலும் BLOCKCHAIN எனும் தொழில்நுட்பமானது இந்த உலகிற்கு முதன் முதலில் 2008ம் ஆண்டில் சதோஷி நகமோட்டா என்பவரால் அறியப்பட்டது. ஆம் சதோஜி நகமோட்டா பிளாக்செயின் தொழில்நுட்பத்தை வேறு பரிமாணத்தில் உருவாக்கி அறிமுகப்படுத்தினார். அவர் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் HASHCASH METHOD எனப்படும் முறையை உருவாக்கினார் இதன் மூலமாக எந்த விதமான TRUSTED PARTY SIGN இல்லாமல் நாம் பாதுகாப்பாக இணையத்தில் ஆவணங்களை பரிமாற்றம் செய்ய இயலும். பின்னாளில் இந்த HASHCASH METHOD ஆனது கிரிப்டோகரண்சி எனப்படும் பிட்காயின் தோன்றி வளர்ந்திட மிகவும் உதவியது.

INTRODUCTION TO BLOCKCHAIN IN TAMIL:

கட்டச்சங்கிலி என்பது கட்டங்களின்(Block) தொகுப்பு ஆகும் இதில் ஒவ்வொரு கட்டமும் தகவல்களை உள்ளடக்கியுள்ளது. கட்டச்சங்கிலி நுணுக்கம் கணினி கோப்புகளை(Digital Documents) நுணுக்கமாக பதிவு செய்ய பயன்படுகிறது மேலும் இதை மாற்ற இயலாது. கட்டச்சங்கிலி நோக்கமானது போலி இரட்டை தரவுகளை நீக்க பயன்படுகிறது. கட்டச்சங்கிலியானது பணம்(money) சொத்து(property) மற்றும் ஒப்பந்தம்(contract) போன்றவற்றை பாதுகாப்பாக வேறெந்த மூன்றாம் நபராகிய அரசாங்கம் மற்றும் வங்கியின் உதவியில்லாமல் பரிமாற்றம் செய்ய பயன்படுகிறது. கட்டச்சங்கிலியில் ஒரு முறை தகவல் பதிவேற்றப்பட்டால் அதை நாம் எளிதாக மாற்ற இயலாது.

கட்டச்சங்கிலி என்பது ஒரு கணினி நெறிமுறை மென்பொருள்(Protocol Software). ஆனால் கட்டச்சங்கிலி ஒரு கணினி இணையம்(Internet) இல்லாமல் இயங்காது. இது ஒரு தொழில்நுட்பத்தின் தொழில்நுட்பம் என அழைக்கப்படுகிறது ஏனென்றால் இது மற்ற தொழில்நுட்பத்தை தாக்குகிறது. கட்டச்சங்கிலி ஆனது ஒரு தரவுத்தளம், மென்பொருள் செயலி, மற்றும் சில இணைக்கப்பட்ட கணினி போன்ற பலவற்றால் ஆகும்.

Blockchain தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு பக்கமும் பரிமாற்றத்தின் போது ஒரு ப்ளாகை உருவாக்குகிறது.ஒவ்வொரு ப்ளாகும் ஒரு ஹாஸ் டேக்(# tag) ஐ கொண்டுள்ளது. இந்த கிரிப்டோகிராபிக் ஹாஷிங் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு பக்கமும் பரிமாற்றத்தின் போது ஒரு பிளாக் உருவாக்கத்திற்கு பிறகு ஒரு நிலையான பாதுகாப்பான குறியீட்டை உருவாக்குகிறது.

RESISTANT DATA MODIFICATION:

பிளாக் செயினின் சிறப்பம்சம் என்னவென்றால் இங்கே நாம் ஒரு முறை ஏதேனும் தகவல்களை உருவாக்கினால் நாம் அந்த தகவலை மீண்டும் மாற்ற இயலாது. ஒருவேளை தாங்கள் அதை மாற்ற நினைத்தாலும் தங்கள் இணைப்பில் உள்ள அனைத்து பிளாக்குகளிலும் தகவலை மாற்ற வேண்டியிருக்கும் அது மிகவும் சிக்கலானதாகும்.

KEY ELEMENTS OF BLOCKCHAIN:

  • DISTRIBUTED LEDGER TECHNOLOGY
  • IMMUTABLE RECORDS
  • SMART CONTRACT

DISTRIBUTED LEDGER TECHNOLOGY:

பிளாக் செயின் DISTRIBUTED LEDGER TECHNOLOGY எனும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால் தகவல்கள் அனைத்தும் எந்த விதமான ஒரு குறிப்பிட்ட SERVERல் சேமிக்கப்பட மாட்டாது. மேலும் தகவல்கள் அனைத்தும் DISTRIBUTED முறையில் இணைக்கப்பட்டிருக்கும். இதனால் எந்தவிதமான இணையத் திருடர்களும் தகவலைத் திருட முடியாது.

DISTRIBUTED LEDGER TECHNOLOGYல் தகவல்கள் அனைத்தும் மைய செர்வரில் சேமிக்கப்படுவதால் தகவல்கள் அனைத்தும் PEER TO PEER தொழில்நுட்பம் முறையில் இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலமாக பயனர்களுக்கு TRANSPARENCY எனப்படும் தகவல் வெளிப்படைத்தன்மை முழுமையாக கிடைக்கிறது.

பிளாக் செயினில் நடைபெறும் அனைத்து விதமான தகவல் பரிமாற்றங்களும் பதிவு செய்யப்படுகின்றன. உதாரணமாக தாங்கள் ஒரு சொத்தை இந்த தொழில் நுட்பத்தில் வாங்குகிறீர்கள் என்றால் அந்த சொத்தின் முதலாளி முதலில் அந்த சொத்து பத்திரத்தை யாருக்கு கொடுத்தார் பிறகு அது எத்தனை பேரிடம் கைமாறியது இப்போது யாரிடம் இருந்து தாங்கள் வாங்குகிறீர்கள் போன்ற அனைத்து வரலாறும் சேமிக்கப்பட்டிருக்கும்.   

IMMUTABLE RECORDS:

SHARED LEDGERல் பதிவுசெய்யப்பட்ட பிறகு எந்த ஒரு பங்கேற்பாளர்களும் பரிவர்த்தனையை மாற்றவோ அல்லது அழிக்கவோ முடியாது. SHARED LEDGERல் ஏதேனும் பிழை இருந்தால் பிழையை மாற்ற புதிய பரிவர்த்தனை சேர்க்கப்பட வேண்டும். பின்னர் இரண்டு பரிவர்த்தனைகளும் தென்படும்.

SMART CONTRACT:

பரிவர்தனைகளின் செயல்பாடுகளை துரிதப்படுத்த ஒரு குறிப்பிட்ட நிபந்தனை விதிகளின் தொகுப்பு எனப்படும் SMART CONTRACT நுணுக்கம் பிளாக்செயினில் சேர்க்கப்பட்டு தானாகவே செயல்படுத்தப்படும். கார்ப்பரேட் பத்திரப் பரிமாற்றங்களுக்கான நிபந்தனைகளை ஒரு SMART CONTRACT வரையறுக்கலாம்.

BLOCKCHAIN IN SCALABILITY(வளர்ச்சி):

ப்ளாக்சைன் ஸ்கேலாபிலிட்டி எனப்படும் வளர்ச்சியில் முன்னோடியாக உள்ளது. ஸ்கேலாபிலிட்டி வளர்ச்சியில் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பணபரிமாற்றத்தின் போதும் எலக்ட்ரானிக் பணம் எனப்படும் பிட்காயின் மற்றும் ஈதரம் கிரிப்டோகரணசியில் சிறிது பின்னடைவாகவுள்ளது.

TYPES OF BLOCKCHAIN IN TAMIL:

பிளாக்செயினில் இரண்டு விதமான வகைகள் உள்ளன. அவையாவன PUBLIC BLOCKCHAIN AND PRIVATE BLOCKCHAIN என்ற இரு வகைகளாகும். PUBLIC BLOCK CHAIN எனப்படும் பொதுவான ப்ளாக்சைனில் பயனாளர்கள் தாங்களாகவே தகவல்களை நிர்வகிக்கிறார்கள் அவர்களுக்கு தனியாக நிர்வாகி தேவைப்படமாட்டாது. PRIVATE BLOCKCHAIN எனப்படும் தனிப்பட்ட ப்ளாக்சைன் இதில் தங்களுக்குள்ளாகவே இணையத்தில் பரிமாற்றத்தை மேற்கொள்ளகிறார். இந்த PRIVATE BLOCKCHAINல் நிர்வாகி தேவைப்படுகிறார்.

PUBLIC BLOCKCHAIN IN TAMIL:

Public blockchainல் யார் வேண்டுமானாலும் இணைந்து பங்கு கொள்ளலாம். இதற்கு உதாரணமாக நாம் பிட்காய்ன் டிஜிட்டல் நாணயத்தை கூறலாம். இதில் ஒருசில குறைபாடுகள் உள்ளன அவையாவன கணிசமான கணக்கீட்டு சக்தி தேவைப்படலாம், பணப்பரிமாற்றத்தில் எந்தவொரு தனியுரிமையும் இல்லை, இதில் பாதுகாப்பு அம்சமும் குறைவாகவே உள்ளது.

PRIVATE BLOCKCHAIN IN TAMIL:

Private blockchain ஆனது Public blockchain நெட்வெர்க்கைப் போன்றே ஒரு DECENTRALIZED PEER TO PEER நெட்வொர்க் ஆகும். PEER TO PEER என்றால் ஒரு கணினி மற்றொரு கணினியுடன் அல்லது ஒரு நெட்வொர்க் மற்றொரு நெட்வொர்குடன் தொடர்பு கொள்வதைக் குறிக்கிறது.

இருப்பினும் ஒரு குறிப்பிட்ட அங்கீகரிக்கப்பட்ட அமைப்பானது நெர்வொர்க்கில் யார் பங்கேற்கலாம் என்பதை நிர்வகித்து கட்டுப்படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட நெறியைப் வரையறுத்து DISTRIBUTED LEDGERஐ பராமரிக்கிறது. ஒரு PRIVATE BLOCKCHAINஐ கார்ப்பரேட் பயர்வாலின் பின்னால் இயக்கலாம் மேலும் இதனை அதன் வளாகத்தில் கூட ஹோஸ்ட் செய்யலாம்.

PERMISSIONED BLOCKCHAIN IN TAMIL:

Private blockchainஐ அமைக்கும் நிறுவனங்கள் பொதுவாக முதலில் Permissioned blockchain நெட்வொர்கை அமைக்கும். நெட்வொர்க்கில் யார் பங்கேற்கலாம் என்ன பரிவர்தனையில் ஈடுபடலாம் என்பதற்கு இது கட்டுப்பாடுகளை விதிக்கிறது. பங்கேற்பாளர்கள் சேர்வதற்கான அழைப்பிதழ் அல்லது அனுமதியைப் பெற வேண்டும்.

CONSORTIUM BLOCKCHAIN IN TAMIL:

பல நிறுவனங்கள் பிளாக்செயினை பராமரிப்பதற்கான பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளலாம். முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் பணப்பரிவர்த்தனைகளை யார் சமர்பிக்கலாம் மற்றும் இதன் தரவை யார் அணுகலாம் என்பதை தீர்மானிக்கிறது. இந்த வகையான பிளாக்செயின் வணிகம் செய்வதற்கு சிறந்ததாக உள்ளது.

SECURITY OF BLOCKCHAIN IN TAMIL:

பொதுவாக வங்கியில் ஒரே ஒரு மைய்யப்பட்ட தரவுத்தளம் இருக்கும் ஹேக்கர் தரவை திருட முயன்றால் இந்த தரவுத்தளத்தை தாக்கினால் போதும். ஆனால் ப்ளாக்சைனில் தரவை திருட முயன்றால் ப்ளாக்சைனில் இணையத்தில் இருக்கும் அணைத்து கணினியையும் ஹேக் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது எனவே இது பாதுகாப்பானதாகும்.

CRYPTOCURRENCY OF BLOCKCHAIN IN TAMIL:

பொதுவாக எந்த நாட்டுப் பணமும் ஒரு மத்திய உரிமம் மூலமாக (வங்கி அல்லது அரசாங்கம்) சரிபார்க்கப்படுகிறது. இந்த வங்கியில் ஏதும் கோளாறு ஏற்பட்டாலோ அல்லது நிலையில்லா அரசாங்கம் ஏற்பட்டாலோ பயனாளர் பணத்திற்கு பாதுகாப்பின்மை ஏற்படுகிறது. இந்த பாதுகாப்பின்மையை சரிசெய்ய எலக்ட்ரானிக் பணம் உருவாக்கப்பட்டது.

BITCOIN(பிட்காயின்):

பிட்காயின் என்பது கிரிப்டோகரன்ஸின் ஒருவகையான மின்னணு பணமாகும் இது பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் மூலமாக செயல்படுகிறது. இதை 2008 ம் ஆண்டு சதோஷி நகமோடோ என்பவர் கண்டுபுடித்தார்.

FEATURES OF BLOCKCHAIN IN TAMIL:

1. மையம்சாரமாய் (DECENTRALIZED)

2. நிலைப்புத்தன்மை IMMUTABILITY (ONCE DONE NO EDIT,UPDATE,DELETE)

2. வெளிப்படைத்தன்மை (TRANSPARENT)

4. கணினியிலிருந்து கணினிக்கு தரவிறக்கம் (PEER TO PEER NETWORK)

ADVANTAGES OF BLOCKCHAIN IN TAMIL:

I. ஓட்டு பதிவு செய்வதில் இதை பயன்படுத்துவதின் மூலம் ஊழல் தடுக்கப்படுகிறது.

II. வெளிப்படையான தொழில்நுட்பம்.

III. மருத்துவம்

IV. நிதித்துறை

V. பாதுகாப்பு

VI. மனை பிரிவில்

VII. ரகசிய ஒப்பந்தம்

VIII. இ வணிகம்

IX. பணம் செலுத்தும் முறையிலும்

To read more about BLOCKCHAIN TECHNOLOGY

Share the knowledge