un coup d’oeil sur la france 6th std French in Tamil-Part 2(ALF leçon 0)
பிரான்ஸ் நாட்டின் வரலாறு மற்றும் மொழியின் வரலாற்றை பற்றி கூறியுள்ளேன் மேலும் உச்சரிப்பு முறையும் விளக்கப்பட்டுள்ளது. பிரஞ்சு மொழியானது உலகம் முழுக்க 30 நாடுகளில் பேசப்படுகிறது.
இந்த மொழியை முதலில் 30 ஆண்டுகளுக்கு முன்பு ரோமானியர்கள் பேசினார்கள் பின்பு இந்த மொழி கல்விக்கொள்கையால் மற்ற நாடுகளுக்கு பரவியது. தற்சமயம் உலகில் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் மேலும் கனடாவிலும் ஐரோப்பாவின் சில நாடுகளிலும் இந்த மொழி பேசப்படுகிறது. நமது நாட்டிலும் அனைத்து CBSE பள்ளிகளிலும் இந்த மொழி இரண்டாம் மொழியாக கற்பிக்கபடுகிறது
பிரஞ்சு – சிறந்த பேச்சு மொழியாக உள்ளது.
அரபிக் – எழுதுவதற்கு சிறந்த மொழியாக உள்ளது.
இத்தாலி – சிறந்த உடற்கூறு மொழியாக உள்ளது.
ஜெர்மன் – சிறந்த பாடல் மொழியாக உள்ளது.
ஆங்கிலம் – சிறந்த கதை சொல்லும் மொழியாக உள்ளது.
நாம் நாட்டில் ஒருவரை ஒருவர் பார்க்கும் பொழுது மரியாதையாக வணக்கம் என்று கூறுவது இயல்பு அதேபோல வடநாட்டிலும் நமஸ்தே என்று கூறுவது உண்டு ஆனால் பிரான்சில் நாம் புதிதாக ஒருவரை ஒருவர் சந்தித்தால் மரியாதையாக முத்தம் கொடுப்பது வழக்கமாகும் முத்தம் என்றால் இது ஒரு வகையான Air Kiss ஆகும்.

இங்கே அனைத்து விதமான எழுத்துக்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கும் ஆனால் சில எழுத்துக்களின் உச்சரிப்பு முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கும். அந்த மாதிரியான எழுத்துக்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டியது அவசியம். உதாரணமாக E, G, H, J, Q, R போன்ற எழுத்துக்களின் ஒலிகள் முற்றிலும் குழப்பத்தை ஏற்படுத்த கூடியவை. இவைகள் அனைத்தையும் காணொளியில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன் பார்த்து பயன் பெறவும்.
E – இந்த எழுத்தை அ போன்றும் சொல்ல கூடாது ஓ போன்றும் சொல்ல கூடாது.
G – இந்த எழுத்தை J போன்று சொல்ல வேண்டும்.
H – இந்த எழுத்து எப்பொழுதும் Silent ஆக வரும்.
J – இந்த எழுத்தை G போன்று சொல்ல வேண்டும்.
Q – இந்த எழுத்தை கு என்று கூற வேண்டும்.
R – இந்த எழுத்து Ha ஒளியில் வரும்.
பிரெஞ்சில் மேற்கூறிய இந்த ஆறு எழுத்துக்களை மட்டும் தெளிவு படுத்திவிட்டால் போதும் மீதி அனைத்தும் எளிதுதான் நண்பர்களே. ஆனால் மெய் எழுத்து ஒன்றுடன் ஒன்று சேரும் போது அதன் ஒலி மாறுபடும் அதை மட்டும் தெரிந்து கொண்டால் அவ்வளவுதான் பிரஞ்சு படிப்பது வெகு எளிது அதை இனி வரும் நாட்களில் உங்களுக்கு தெளிவு படுத்துகிறேன்.